"4 நாளுல 3 ஆவது தடவ.." கழிவறை கதவு திறந்து உள்ளே போன வேகத்தில்.. பதறி அடிச்சிட்டு வெளியே ஓடி வந்த பெண்..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஃப்ளோரிடா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த சில தினங்களுக்கு முன், தனது வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்ற போது, அங்கே அவருக்கு கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.

Advertising
>
Advertising

Also Read | முதல் மனைவிக்கு நேர்ந்த பெரும் சோகம்.! அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் வேதனை பதிவு.. எப்படி நடந்தது.?

ஃப்ளோரிடாவின் ஹாலிவுட் பகுதியைச் சேர்ந்த மிட்செல் ரெனால்ட்ஸ் என்ற பெண்மணி, தனது சமையல் வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டு, இரவு நேரத்தில் கழிவறைக்கு சென்று உள்ளார்.

அப்போது கதவை திறந்து உள்ளே சென்ற வேகத்திலேயே பதறி அடித்தபடி வெளியே வந்துள்ளார் ரெனால்ட்ஸ். இதற்கு காரணம், அவரது கழிவறை Closet-க்குள் உடும்பு ஒன்று கிடந்துள்ளது. இதனைக் கண்டதும் அச்சத்தில் உறைந்தே போன மிட்செல், விலங்குகளைக் கைப்பற்றும் மையத்திற்கு அழைத்து தகவலை தெரிவித்துள்ளார்.

அதன் படி, உடனடியாக அங்கு வந்த ஹெரால்டு ரோண்டோன் என்பவர், அந்த உடும்பை மீட்டு வெளியே எடுத்துச் சென்றார். இது தொடர்பாக பேசும் ஹெரால்டு, கடந்த நான்கு நாட்களில் இப்பகுதியை சுற்றியுள்ள வீட்டின் கழிவறையில் இருந்து, மூன்று உடும்புகளை கைப்பற்றி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமில்லாமல், கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 30க்கும் மேற்பட்ட ஊர்வன விலங்குகளை அங்குள்ள வீட்டின் கழிவறையில் இருந்தும் தான் கைப்பற்றியதாக ஹெரால்டு கூறியுள்ளார்.

மெக்ஸிகோ மற்றும் சென்ட்ரல் அமெரிக்கா பகுதியில் அதிகம் காணப்படும் இந்த உடும்பு, தற்போது ஃப்ளோரிடாவில் அதிகமாக காணப்பட்டு வருகிறது. இதற்கு காரணம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இப்பகுதிக்கு பல உடும்புகள் செல்லப் பிராணியாக வளர்க்க கொண்டு வந்ததாகவும், அதிலிருந்து தப்பித்த உடும்புகள், தற்போது இந்த மாதிரி சிக்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இது தொடர்பாக உடும்பை மீட்ட ஹெரால்டு, கழிவறையின் மேல் கூரை மற்றும் அங்கே இருக்கும் துவாரங்களை சரி வர மூடி வைத்திருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதே போல, கழிவறைக்கு சென்று உட்காரும் போது, சுற்றி பார்த்து விட்டு, பின் அமர வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

அடிக்கடி இந்த பகுதிகளில் உடும்புகள் சிக்கி வருவதால், வீடுகளின் அருகே உள்ள கழிவு நீர் லைன் வழி கழிவறைக்குள் வந்திருக்கலாம் என்றும் அப்பகுதி மக்கள் கருதுகின்றனர்.

Also Read | "அம்மாடியோவ்.." கின்னஸ் சாதனை படைத்த காளான் மோதிரம்.. "ஒரு மோதிரத்தில் இத்தன ஆயிரம் வைரமா??.." பிரமிப்பில் ஆழ்ந்த மக்கள்

FLORIDA, WOMAN, IGUANA, TOILET

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்