செய்யாத குற்றத்துக்கு தண்டனை.. 34 வருஷத்துக்கு பிறகு விடுதலை செய்யப்பட்ட நபர்.. பகீர் பின்னணி..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் செய்யாத குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்ட நபர் 34 ஆண்டுகளுக்கு பிறகு விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "என் கன்னத்துல அறைஞ்ச மாதிரி இருந்துச்சு".. GOD சச்சினிடம் ஸ்லெட்ஜிங்.. பல வருஷம் கழிச்சு மனம் திறந்த சக்லைன் முஷ்டாக்..!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் சிட்னி ஹோல்ம்ஸ். கடந்த 1988 ஆம் ஆண்டு Fort Lauderdale பகுதியில் வைத்து, ஒரு கொள்ளை முயற்சி நடைபெற்றிருக்கிறது. அப்போது பெண் ஒருவரிடம் இருந்து துப்பாக்கி முனையில் கொள்ளையன் பணத்தை திருடிவிட்டு அங்கிருந்து தப்பியதாக சொல்லப்படுகிறது. அப்போது இருவர் ஒரு காரை திருடி சென்றதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும் நோக்கில் சிட்னி அவர்களுக்கு கார் டிரைவராக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

Images are subject to © copyright to their respective owners.

சிறை தண்டனை

இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில் சிட்னிக்கு 400 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து கடந்த 1989 ஆம் ஆண்டு அவர் Broward County சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இருப்பினும் தன்னுடைய வழக்கை மேல்முறையீடு செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்து வந்தார். இந்த கோரிக்கையை அதிகாரிகள் ஏற்று இந்த வழக்கு தொடர்பான விசாரணையை மீண்டும் துவங்கியுள்ளனர்.

Images are subject to © copyright to their respective owners.

அப்போது, சாட்சிகளை மறுபடியும் விசாரித்தபோது சம்பவம் நடைபெற்ற காலத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் மற்றும் சாட்சிகள் கொடுத்த உறுதியில்லாத தகவல்கள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு கடந்த திங்கட்கிழமை சிட்னி ஹோல்ம்ஸை விடுதலை செய்வதாக அறிவித்தார் நீதிபதி. தவறான நபர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டிருப்பதாக குறிப்பிட்டு சிட்னியை நிரபராதி என அறிவித்து விடுதலை செய்திருக்கிறார் நீதிபதி. இதனை தொடர்ந்து 34 ஆண்டுகள் சிறைவாசத்துக்கு பிறகு வெளியே வந்த சிட்னியை அவரது குடும்ப உறுப்பினர்கள் கண்ணீருடன் ஆரத்தழுவி வரவேற்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

வெறுப்பு இல்லை

இதுகுறித்து பேசியுள்ள சிட்னி,"எனக்கு கடவுள் நம்பிக்கை உள்ளது. யார் மீதும் எனக்கு வெறுப்போ பகையோ இல்லை. என்றாவது ஒருநாள் இந்த சிறையிலிருந்து வெளியே வருவேன் என நினைத்திருந்தேன்.. இதுதான் அந்த நாள்" என உருக்கத்துடன் தெரிவித்திருக்கிறார். செய்யாத குற்றத்திற்காக 34 ஆண்டுகள் சிறையில் வாடிய நபர் மறுவிசாரணை மூலமாக நிரபராதி என தெரியவந்து விடுதலை செய்யப்பட்டிருப்பது அமெரிக்கா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read | சமோசா விற்பனையில் தினமும் 12 லட்சம் வருமானம்..! சொந்த வீட்டை விற்று கனவை நிறைவேற்றிய பட்டதாரி தம்பதி..!

FLORIDA, MAN, JAIL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்