என்ன நடக்குது!?.. அபாயகரமான ரசாயணத்தின் அளவு 100 மடங்கு அதிகரிப்பு!.. பொதுத் தண்ணீரில் விஷம் கலந்த 'ஹேக்கர்ஸ்'!.. படுபாதக செயலால் மக்கள் பீதி!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மக்கள் பயன்படுத்தும் பொதுத் தண்ணீர் விநியோக கட்டமைப்பை ஹேக் செய்து, அபாயகரமான ரசாயனத்தின் அளவை 100 மடங்கு வரை அதிகரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்ற வெள்ளிக்கிழமை மதியம், அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா நகரின் Oldsmar தண்ணீர் சிகிச்சை அமைப்பை (water treatment plant) யாரோ தொலைநிலையிலிருந்து பயன்படுத்துவதைக் கணினி நிர்வாகி ஒருவர் கண்டுபிடித்தார்.

அந்த இணைய ஊடுருவி, sodium hydroxide ரசாயனத்தின் கட்டுப்பாடுகளைத் திறந்து, அதன் அளவை 100 மடங்கு அதிகரித்துவிட்டு, அமைப்பைவிட்டு வெளியாகியதாக அதிகாரி குறிப்பிட்டார்.

அந்த ரசாயனம், தண்ணீரின் அமிலத்தன்மையைக் கட்டுப்படுத்துவதற்காகவும் தண்ணீரில் உள்ள உலோகங்களை அகற்றுவதற்காகவும் சிறிய அளவில் சேர்க்கப்படுவதுண்டு.

ஆனால், அதன் அளவை 100 மடங்கு வரை அதிகரித்தால், அதுவே விஷமாக மாறிவிடும். இந்நிலையில், அதிகப்படியான ரசாயனம் கலந்த தண்ணீர் மக்களைச் சேர குறைந்தபட்சம் 24 மணி நேரமாகும் என்று அதிகாரி சொன்னார்.

மேலும், அந்த ஊடுருவலை சரியான நேரத்தில் கண்டுபிடித்து சரி செய்யப்பட்டுவிட்டதால், யாருக்கும் ஆபத்தில்லை என்று உள்ளூர் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனால், சுமார் 15,000 பேர் பாதுகாக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.

எனினும், அது போன்ற இணையத் தாக்குதல்கள் அமெரிக்கக் கட்டமைப்புகளை அச்சுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்