ஒரு மாசத்துல பெய்யவேண்டிய மழை வெறும் ஒன்றரை மணி நேரத்துல கொட்டி தீர்த்துடுச்சு.. திணறிப்போன மக்கள்.. வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரான்சில் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒன்றரை மணி நேரத்தில் கொட்டித் தீர்த்திருக்கிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

Advertising
>
Advertising

Also Read | "அவர் வாங்குன சம்பளத்தை விட 650 மடங்கு அதிகமா சொத்து வச்சிருக்காரு".. அதிரடி ரெய்டு நடத்திய அதிகாரிகள்.. எல்லோருக்கும் ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு..!

வெப்ப அலை

ஐரோப்பா முழுவதும் வெப்ப அலையின் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். வெப்பத்தினை தவிர்க்க அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பிரிட்டனில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவு வறட்சி ஏற்பட்டிருக்கிறது. முக்கிய நீர்நிலைகளில் நீர்ப்பிடிப்பின் அளவு கணிசமான அளவில் குறைந்திருக்கிறது. மேலும், காட்டுத்தீ போன்ற பேரிடர்கள் அரசுக்கு நெருக்கடி அளித்து வருகின்றன. இந்நிலையில் ஐரோப்பிய நாடான பிரான்சில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது.

கனமழை

நேற்று பிரான்சில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அந்த வகையில், தெற்கு பிரான்சில் கனமழை காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. பிரான்சின் தலைநகரான பாரிசில் ஒரு மாதம் பெய்யக்கூடிய மழை ஒன்றரை மணி நேரத்தில் கொட்டித் தீர்த்திருக்கிறது. மாலை 7 மணியளவில், 90 நிமிட இடைவெளியில் 40 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்ததாக பிரெஞ்சு தேசிய வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது. இது ஒரு மாதம் பெய்யவேண்டிய மழையில் 70 சதவீதமாகும்.

 

கடுங்காற்று

கனமழை காரணமாக பாரிஸ் முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மோசமான வானிலை காரணமாக பல பாரிஸ் மெட்ரோ நிலையங்கள் தங்கள் நுழைவாயில்களை மூடிவிட்டன. மழைநீர் மெட்ரோ ரயில் நிலையங்களில் வழிந்தோடும் காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. ஈபிள் டவரின் மேல்பகுதியில் காற்றானது மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் வீசியதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

பிரான்சின் மார்சேய் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை ஒரே இரவில் இடியுடன் கூடிய கனமழை மழை கொட்டித்தீர்த்திருக்கிறது. அங்கே ஒரு மணி நேரத்திற்கு கிட்டத்தட்ட 150 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது எனவும் ஒரு மணி நேரத்தில் 97 மில்லிமீட்டர்கள் மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

 

Also Read | 10 குழந்தைகள் பெற்றுக்கொண்டால் லட்சக் கணக்கில் பரிசு.. ரஷ்ய அதிபர் வெளியிட்ட அறிவிப்பு.. புதினின் மாஸ்டர் பிளான்..!

HEAVYRAIN, FLOOD, PARIS, RAINFALL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்