"கரெக்ட்டான Flight தான்.. ஆனா தப்பான நாட்டுல தரையிறங்கிடுச்சு".. பயணிகளுக்கு வந்த சந்தேகம்.. அதிகாரிகள் சொல்லிய பகீர் பதில்..!
முகப்பு > செய்திகள் > உலகம்அயர்லாந்து நாட்டில் இருந்து போர்ச்சுக்கல் நாட்டுக்கு பயணித்த விமான பயணிகள் கொஞ்ச நேரத்தில் குழம்பிப்போயிருக்கிறார்கள். விமான நிலைய அதிகாரிகள் வந்து விளக்கம் அளித்த பிறகுதான் மொத்த விபரமும் பயணிகளுக்கு தெரியவந்திருக்கிறது.
Also Read | அடேங்கப்பா.. யோகி ஆதித்யநாத்திற்கு கோவில் கட்டிய பக்தர்.. இதுக்கெல்லாம் அந்த சபதம் தான் காரணமாம்..!
விமான பயணங்கள் சில நேரங்களில் நாம் நினைத்தது போல அமைவது இல்லை. தவறான விமானங்களில் ஏறி வேறு நாட்டிற்கு சிலர் சென்றுவிடுவதை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், கடந்த 16 ஆம் தேதி ரியான் விமானத்தில் பயணித்த நபர்களுக்கு வித்தியாசமான அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. அதாவது அந்த விமானமே தவறான நாட்டில் தரையிறங்கியுள்ளது.
குழப்பம்
அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரத்தில் இருந்து கடந்த 16 ஆம் தேதி போர்ச்சுக்கலுக்கு கிளம்பியுள்ளது ரியான் ஏர் விமான நிறுவனத்தை சேர்ந்த விமானம் ஒன்று. போர்ச்சுக்கலின் ஃபாரோ விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய விமானம் தவறுதலாக ஸ்பெயின் நாட்டில் உள்ள மலாக்காவில் தரையிறங்கியுள்ளது. விமானத்தில் பயணித்த மக்கள் ஆரம்பத்தில் இதுபற்றி ஏதும் தெரிந்திருக்கவில்லை. சொல்லப்போனால் சிலர் தாங்கள் போர்ச்சுக்கலுக்கு வந்துவிட்டதாகவே நினைத்திருக்கிறார்கள். ஆனால், அவர்களை ஏற்றிச்செல்ல பேருந்து ஒன்று வந்திருக்கிறது. அப்போதுதான் இந்த விஷயம் பயணிகளுக்கு தெரியவந்திருக்கிறது.
அந்த விமானத்தில் பயணித்த Barry Masterson என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த சம்பவம் குறித்து பதிவு செய்யவே, சமூக வலை தளங்கள் முழுவதும் இந்த விவகாரம் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனை தொடர்ந்து பயணிகள் பேருந்து மூலமாக போர்ச்சுக்கலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
மன்னிப்பு
பிரெஞ்சு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அமைப்பு (ATC) அன்றைய தினம் சந்தித்த குளறுபடிகள் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அன்றைய தினம் முழுவதும் அப்பகுதி வழியாக பயணித்த பல விமானங்களுக்கு சரியான முறையில் போக்குவரத்து கட்டளைகள் கிடைக்காமல் போயிருக்கிறது. இதுகுறித்து ரியான் விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் பேசுகையில்,"டப்ளினில் இருந்து ஃபாரோவிற்கு (செப்டம்பர் 16) சென்ற இந்த விமானம், பிரெஞ்சு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு (ATC) வேலைநிறுத்தத்தால் ஏற்பட்ட இடையூறு காரணமாக மலாக்காவில் தரையிறங்கியது. இது முற்றிலும் எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது. இதனால் ஏற்பட்ட அசௌகரியத்திற்கு Ryanair உண்மையாக பயணிகளிடம் மன்னிப்பு கேட்கிறது" என்றார்.
Also Read | நைட்ல காதலியை பார்க்கப்போன இளைஞர்.. மறைஞ்சு நின்ன இளம்பெண்ணின் அம்மா.. கொஞ்ச நேரத்துல கேட்ட அலறல் சத்தம்..!
மற்ற செய்திகள்
"இனிமே மன்கட் இல்ல, அதுக்கு பதிலா".. ICC கொண்டு வந்த புதிய ரூல்ஸ்.. "ஒவ்வொண்ணும் Gun மாதிரி இருக்கே"
தொடர்புடைய செய்திகள்
- விமானத்தையே வீடா மாத்திட்டாங்க.. அதுவும் நடு காட்டுக்குள்ள.. வசதிகள் எல்லாம் மிரட்டலா இருக்கே..!
- கிளம்புன இடத்துக்கே திரும்புன விமானம்.. தரையிறங்குன அப்பறம் தான் விபரமே தெரியவந்திருக்கு..!
- 70 வருஷத்துக்கும் மேல நடைபெறும் தக்காளி அடிக்கும் திருவிழா.. டன் கணக்கில் இறக்கப்பட்ட தக்காளி லோடு.. சுவாரஸ்ய வரலாறு..!
- விமானத்துல அழுதுகிட்டே இருந்த குழந்தை.. டக்குன்னு விமான பணியாளர் செய்த உதவியை பார்த்து நெகிழ்ந்துபோன பயணிகள்.. வீடியோ..!
- "Bus-அ நிறுத்துங்க".. திடீர்னு கத்திய பயணி.. சீட்டுக்கு கீழ இருந்ததை பார்த்துட்டு நடுங்கிப்போன கண்டக்டர்.. பரபரப்பான பொதுமக்கள்..!
- "ஐயையோ இதுமேலயா தோட்டத்தை வச்சிருந்தோம்".. வீட்டை பெருசாக்க நெனச்ச ஓனர்.. விஷயத்தை கேள்விப்பட்டு ஸ்பாட்டில் குவிந்த ஆராய்ச்சியாளர்கள்..!
- விமானத்துல ஜாலியா ஜன்னல் சீட்ல உக்காந்த இளைஞர்.. டேக் ஆஃப் ஆன கொஞ்ச நேரத்துல ஜன்னல் கண்ணாடியை பார்த்ததும் தூக்கிவாரி போட்ருச்சு.. !
- திடீர்னு கேட்ட சத்தம்.. கடலுக்கடியே உள்ள சுரங்க பாதையில் சிக்கிய மக்கள்.. கொஞ்ச நேரம் கழிச்சுத்தான் விவரமே தெரியவந்திருக்கு..!
- உலகத்திலயே 'Unlucky' ஆன மனுஷன் இவரு தான் போல".. சோதனை முடிவில் தெரிய வந்த அதிர்ச்சி.. "ஒரே நேரத்துல இவ்ளோ பிரச்சனையா??"
- வெளிநாட்டுக்கு டூர் போன தம்பதி.. திரும்பி வந்ததும் காத்திருந்த கடிதம்.. "நாங்க வெளியூர்'ல இருக்குறப்போ இது எப்படி நடந்துச்சு??"