‘ப்ளீஸ் மாஸ்க் போடுங்க’!.. விமானத்துக்குள் ‘சேட்டை’ செய்த இளைஞர்கள்.. அதிகாரிகள் எடுத்த அதிரடி முடிவு..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

விமானத்துக்குள் இளைஞர்கள் சிலர் முகக்கவசம் அணிய மறுத்ததால், விமானம் ரத்து செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் இருந்து பாகமாஸ் மாகாணத்துக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் (American Airlines) விமானம் செல்ல தயாராக இருந்தது. டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏறத் தொடங்கினர். அப்போது சில இளைஞர்கள் குழுவாக விமானத்துக்குள் ஏறினர். அதில் யாருமே முகக்கவசம் அணியவில்லை.

இதனால் விமான பணிப்பெண்கள் அவர்களை முகக்கவசம் அணுயுமாறு வலியுறுத்தினர். ஆனால் இதனை அந்த இளைஞர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. தங்களது விமான நிறுவனத்தின் விதிமுறைகளின்படி பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அந்த இளைஞர்களிடம் மீண்டும் விமான ஊழியர்கள் கூறியுள்ளனர். எவ்வளவோ எடுத்துக் கூறியும் இளைஞர்கள் முகக்கவசம் அணிய மறுத்துள்ளனர்.

இதனை அடுத்து பயணிகளின் பாதுகாப்பு கருதி விமான பயணம் ரத்து செய்யப்பட்டது. இதனை அடுத்து உடனடியாக வேறொரு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு மற்ற பயணிகள் அனைவரும் அனுப்பி வைக்கப்பட்டனர். முகக்கவசம் அணிய மறுத்த இளைஞர்களுக்கு மறுநாள்தான் விமானம் இருக்கிறது என கூறி அவர்களை ஹோட்டலில் தங்க வைக்க ஏற்பாடு செய்தனர்.

ஆனால் அதில் பலருக்கு 17 வயதே ஆகியிருந்ததால், ஹோட்டல் விதிமுறைகளின் படி அவர்கள் தங்க இடம் கொடுக்கப்படவில்லை. இதனால் பலரும் விமான நிலையத்திலேயே தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனை அடுத்து மறுநாள் வேறு விமானத்தில் அவர்கள் அனைவரும் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்