32 வருசம் கழிச்சு ஆசிரியையை பார்த்த விமான பணிப்பெண்.. அடுத்த நிமிஷமே நடந்த மனம் உருகும் சம்பவம்!!.. எமோஷனல் வீடியோ!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சோஷியல் மீடியாவில் நாம் அதிகம் ரவுண்ட் அடிக்கும் போது நம்மை சுற்றி நடக்கும் பல விஷயங்களை பற்றி நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

Advertising
>
Advertising

Also Read | பிரிட்டனை ஆளப் போகும் இந்திய வம்சாவளி.. உலகமே உற்று நோக்கும் யார் இந்த ரிஷி சுனக்??..

அப்படி நடக்கும் சமயத்தில், சில விஷயங்கள் நம் கண்ணில் படும்போது ஒருவித தாக்கத்தை கூட நம் மனதில் ஏற்படுத்தலாம்.

அந்த வகையில் ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி பார்ப்போர் பலரையும் மனம் கலங்க வைத்துள்ளது. பொதுவாக நமது அனைவரின் வாழ்க்கையிலும் பள்ளிக்கூடத்தில் உள்ள ஆசிரியர்களின் பங்கு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அப்படி இருக்கையில் விமான பணிப்பெண் ஒருவர் விமானத்தில் வைத்து மனம் உருகிய சம்பவம் தொடர்பான வீடியோ தான் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. அந்த விமானத்தில் பணிபுரிந்த ஒருவர் தான் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அதன்படி அந்த விமானத்தில் இருந்த பணிப்பெண் ஒருவர், சுமார் 32 வருடங்களுக்கு பிறகு, தன்னை பள்ளியில் கற்பித்த ஆசிரியையை அந்த விமானத்தில் பார்த்துள்ளார்.

அப்போது மைக் மூலம் பயணியிடம் பேசும் அந்த விமான பணிப்பெண் லோரி, 1990 ஆம் ஆண்டு தனக்கு பாடம் கற்பித்த ஆசிரியையை தற்போது மீண்டும் இந்த விமானத்தில் சந்திப்பதாக உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தனக்கு மிகவும் பிடித்தமான ஆசிரியை என்றும் 32 ஆண்டுகளாக அவரை பார்க்கவில்லை என்றும் குறிப்பிடும் லோரி, அந்த ஆசிரியை தான் தனக்கு பியானோ வாசிக்க கற்றுத் தந்தார் என்றும் அதன் காரணமாக பியானோவில் மாஸ்டர் முடித்து விட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். இறுதியில் லோரி தனது ஆசிரியையை கட்டித் தழுவி அன்பைப் பொழிந்து கொள்ள இது தொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ளது.

மிக மிக ஸ்பெஷல் தருணமாக இந்த வீடியோ பலராலும் பார்க்கப்படும் நிலையில் இந்த வீடியோவை காணும் நபர்கள், தங்களின் பள்ளிக்காலத்து ஆசிரியர், ஆசிரியைகளை நினைவு கூர்ந்து உருக்கமான கருத்துக்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர்.

 

Also Read | AR Rahman : "தாய் மண்ணே வணக்கம்".. பிரதமர் மோடியின் வீடியோவை பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட்.!

FLIGHT, FLIGHT ATTENDANT, TEACHER, PLANE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்