ஐயோ.. இதுவா..? வலைக்குள் சிக்கிய 16 அடி நீளமுள்ள மீன்.. கவலையில் மூழ்கிய மீனவர்கள்.. ஓஹோ..இப்படி ஒரு காரணம் இருக்கா.?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சிலியில் 16 அடி நீளமுள்ள ராட்சத மீனை பிடித்திருக்கிறார்கள் உள்ளூர் மக்கள். ஆனால், இப்போது அந்த பகுதியே கவலையில் ஆழ்ந்துள்ளது. இதற்கு காரணம் இந்த மீனை பற்றிய பழங்கால கதைகள் தான்.

Advertising
>
Advertising

Also Read | இலங்கையின் இடைக்கால அதிபரானார் ரணில் விக்ரமசிங்கே.. நாளைக்கு நாடாளுமன்றத்துல எடுக்க இருக்கும் முக்கிய முடிவு.. முழுவிபரம்..!

சிலி நாட்டில் உள்ள அரிகா பகுதியை சேர்ந்த சில மீனவர்கள் சில நாட்களுக்கு முன்னர் கடலுக்கு சென்றிருக்கின்றனர். வலையை வீசிவிட்டு வழக்கமாக அவர்கள் காத்திருந்தபோது, ஏதோ பிரம்மாண்டமாக வலையில் சிக்கியதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். இதனை தொடர்ந்து உள்ளே சிக்கிய மீனை வெளியே எடுக்க அவர்கள் முயற்சித்திருக்கிறார்கள் அப்போதுதான் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் அந்த மீனின் அதீத நீளம். 16 அடி நீளமிருந்த அந்த மீனை கவனமாக கரைக்கு கொண்டுசேர்த்துள்ளனர் அந்த மீனவர்கள்.

மீன்பிடி படகில் இருந்து இறக்கப்பட்ட மீனை பார்த்ததும் கரையில் இருந்தவர்களும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள். உள்ளூர் மக்கள் இந்த மீனை ஹெர்ரிங்ஸ் ராஜா எனவும் அழைக்கின்றனர். உண்மையில் இது ஓர் வகை மீன் தான். இதன் அதீத நீளம் காரணமாக அங்குள்ள இயந்திரத்தின் துணையுடன் இந்த மீன் தூக்கப்பட்டு வேறு இடத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

ஆழ்கடல் மீன்

பொதுவாகவே ஆழ்கடல் பகுதியில் வசிக்கும் இந்த வகை மீன்கள் வெப்பமண்டல கடல்களில் அதிகம் காணப்படுகிறது. தென் அமெரிக்காவில் இந்த வகை மீன்கள் வலையில், சிக்குவதை அங்குள்ள மக்கள் விரும்புவதில்லை. ஏனென்றால் இந்த மீனை கெட்ட சகுனமாக கருதுகிறார்கள் உள்ளூர் மக்கள். இந்த மீன் பிடிபட்டால் சுனாமி, நிலநடுக்கம் ஆகியவை ஏற்படும் என இந்த மக்கள் நம்புகிறார்கள்.

ஜப்பானில் கடந்த 2011 ஆம் ஆண்டு, ஏராளமான ஓர் வகை மீன்கள் உள்ளூர் மீனவர்களால் பிடிக்கப்பட்டன. அதனை தொடர்ந்தே புகுஷிமா-வில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அந்த மக்கள் கருதுகின்றனர்.

நிலநடுக்கம்

மேலும், கடல் ஆழத்தில் டெக்டானிக் தட்டுகள் நகர்வதை அறிந்துகொள்ளும் திறன் இந்த மீன்களுக்கு இருப்பதாகவும், அப்போது மட்டுமே இவை ஆழத்தில் இருந்து வெளியே வரும் எனவும் இந்த மக்கள் நம்புகிறார்கள். இதன் காரணமாக, தற்போது சிலியில் ராட்சத ஓர் வகை மீன் பிடிபட்டிருப்பதால் அரிகா பகுதி மக்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர். இருப்பினும் இவற்றுக்கு அறிவியல் ரீதியாக எவ்வித சான்றுகளும் இல்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

Also Read | மாற்றுத் திறனாளி சிறுவனுடன் ஜாலியாக விளையாடும் நண்பர்கள்.. IPS அதிகாரி ஷேர் செஞ்ச நெகிழ்ச்சியான வீடியோ..!

FISHERMAN, CATCHES, MYTHICAL FISH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்