‘ஆமா.. உக்ரைன் சொன்னது உண்மைதான்’.. முதல் முறையா அந்த விஷயத்தை ஒப்புக்கொண்ட ரஷ்யா..!
முகப்பு > செய்திகள் > உலகம்உக்ரைன் மீது நடத்தி வரும் தாக்குதலில் தங்கள் நாட்டு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக ரஷ்யா முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா 4 நாட்களுக்கும் மேலாக தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களை குறி வைத்து ரஷ்யா வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. அதில் உக்ரைன் நாட்டின் 2-வது பெரிய நகரமான கார்கீவில் ரஷ்யா மற்றும் உக்ரைன் படைகள் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது.
இந்த போரில் 300-க்கும் மேற்பட்ட உக்ரைன் நாட்டு மக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் ரஷ்யா தரப்பில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. முன்னதாக, இரு தரப்பிலும் சுமார் 4300 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு நேற்று தெரிவித்திருந்தது. தங்கள் தரப்பில் உயிரிழப்புகள் இல்லை எனக் கூறி வரும் ரஷ்யா இதற்கு ரஷ்யா எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் இருந்தது.
இந்த நிலையில் உக்ரைன் மீது நடத்தி வரும் தாக்குதலில் தங்கள் தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டது உண்மைதான் என ரஷ்யா முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திபில் பேசிய ரஷ்ய பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் இகோர் கொனஷெங்கோவ், ‘தங்கள் தரப்பில் உயிரிழப்புகள் ஏற்பட்டது உண்மைதான். பல வீரர்கள் காயமடைந்துள்ளனர். ஆனாலும், உக்ரைன் தரப்பை விட எங்கள் பாதிப்புகள் பல மடங்கு குறைவுதான்’ என்று அவர் தெரிவித்தார். ஆனாலும் உயிரிழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறித்து ரஷ்யா எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
IPL 2022 : பல கஷ்டம் தாண்டி சாதித்த இந்திய வீரருக்கு.. பஞ்சாப் கிங்ஸ் அணி கொடுத்த கேப்டன் பொறுப்பு..
தொடர்புடைய செய்திகள்
- ஒரு பக்கம் பேச்சுவார்த்தைன்னு சொல்லிட்டு.. சைலண்டா ரஷ்யா செய்யும் வேலை.. அதிர்ச்சியை ஏற்படுத்திய செயற்கைக்கோள் போட்டோ..!
- உக்ரைனில் சிக்கி தவிக்கும் குன்னூர் மாணவி.. கண்ணீர் விடும் பெற்றோர்.. வாட்ஸ் அப் மூலம் கதறும் மாணவர்கள்
- Russia-Ukraine war: களத்தில் இறங்கிய கூகுள் .. ரஷ்யாவுக்கு பெரிய செக்.. திடீரென போட்ட அதிரடி கண்டிஷன்..
- Ukraine Russia War: "ரஷ்யாவுக்கு எதிராக தேவைப்பட்டால் துப்பாக்கியை எடுப்பேன்".. உக்ரைன் பெண் எம்.பி. அதிரடி
- Ukraine Russia War: "போர் முடிவுக்கு வரணும்".. உக்ரைனின் அமைதிக்காக கடவுளிடம் மன்றாடும் போப் பிரான்சிஸ்
- அதிரடி செக்! இனி இந்த 13 நாடுகள் வழியா ரஷ்ய விமானம் பறக்க முடியாது - சூடு பிடிக்கும் உலக அரசியல் சதுரங்கம்!
- Russia-Ukraine War: .. கதிகலங்கி நிற்கும் உக்ரைன்.. ஜப்பான் தொழிலதிபர் செய்த உருக்கமான காரியம்..
- "பேச்சுவார்த்தைக்கு தயார்.." ரஷ்யா வைத்த கோரிக்கை.. உக்ரைன் போட்ட தடாலடி கண்டிஷன்..
- Russia-Ukraine War: "என்ன ஆனாலும்.. என் செல்லக் குட்டிய விட்டு போக மாட்டேன்.. " அடம்பிடிக்கும் இந்திய மாணவர்.. நெகிழ்ச்சி பின்னணி
- "300 பேருக்கும் ஒரே ஒரு பாத்ரூம் தான்".. "உயிர் பயத்தை விட".. நாட்டையே உலுக்கிய 'உக்ரைன்' தமிழ் மாணவியின் வீடியோ