'கொரோனா முடக்கத்துக்கு பின்.. அமெரிக்காவில் இருந்து இந்தியா வரும் முதல் விமானம்'.. தாயகம் திரும்பும் நெகிழ்ச்சியில் 'சான்பிரான்சிஸ்கோ ஏர்போர்ட்டில் கூடிய பயணிகள்!'

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பொது முடக்கத்துக்கு பிறகான முதல் விமானம் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் இருந்து, இந்திய பயணிகளுடன் இன்று இந்தியா புறப்படுகிறது.

கொரோனா நோய்த் தொற்றுக்கு உலகம் முழுவதுமான பாதிப்பு எண்ணிக்கை 4 மில்லியன் அல்லது 40 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், அந்தந்த நாடுகளிலும் ஊரடங்கில் சில தளர்வுகள் உண்டாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு மற்றும் பொதுமுடக்கத்தால் முடங்கியிருந்த விமான சேவைகள் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

கடந்த மே 8-ஆம் தேதி, கொரோனா ஊரடங்கால் முடக்கப்பட்டிருந்த விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டதை அடுத்து, 48 நாட்களுக்கு பிறகான முதல் இந்திய விமானம் அமெரிக்காவுக்கு சென்றது.  இதில் இந்தியாவிலிருந்து 80 பயணிகள் பயணித்தனர். இந்தியாவில் இருந்து புறப்பட்ட  ஏர் இந்தியா நிறுவன விமானம் சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் தரையிறங்கியது.

இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து வந்தே பாரத் மிஷனின் கீழ், பொது முடக்கத்துக்கு பிறகான முதல் விமானம் புறப்படுகிறது. இதற்காக சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் இந்தியர்கள் காத்திருக்கும்

புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 13 லட்சமாகவும், அந்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை தாண்டியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்