'இத படிக்கும்போது நீங்க சந்தோசமா இருப்பீங்க'... 'ஆனா, என்னோட நிலைமை எந்த பொண்ணுக்கும் வர கூடாது'... இளம் பெண் விமானி சொன்ன அதிர்ச்சி தகவல்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆப்கானிஸ்தானின் முதல் பெண் விமானி தாலிபான்கள் குறித்து அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறுவதால் அந்த நாட்டை 20 ஆண்டுகளுக்குப் பிறகு தாலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றி உள்ளனர். இதனால் அங்கு நிலைமை மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுள்ளது. பெண்களின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அவர்களின் அடிப்படை உரிமை என்ன ஆகும் என்ற கவலை பலருக்கும் உள்ளது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் முதல் பெண் விமானியான 29 வயது நிலோபர் ரஹுமானி தாலிபான்கள் குறித்துப் பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார். நிலோபர் அவ்வளவு எளிதில் விமானி என்ற நிலையை அடைந்து விடவில்லை. அவர் முதல் பெண் விமானி ஆனதுடன், அவரின் உயிருக்குத் தாலிபான்களால் அச்சுறுத்தல் இருந்ததால் கடந்த 2015ஆம் ஆண்டு அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்றிருக்கிறார்.

நிலோபரின் குடும்பம் அவர் விமானி ஆவதற்கு உறுதுணையாக இருந்த ஒரே காரணத்திற்காக இன்று அவர்களைத் தாலிபான்கள் குறி வைத்துள்ளார்கள். இதுகுறித்து தனது வேதனையைப் பதிவு செய்துள்ள நிலோபர், ''எனது சூழ்நிலை குறித்துப் படிக்கும் போது உலகத்தில் பலரும் சந்தோசமாக இருக்கலாம். ஆனால் எனது குடும்பம் குறித்து நான் மிகவும் பயப்படுகிறேன். என்னால் நிம்மதியாக ஒரு நாள் கூட தூங்க முடியவில்லை.

தாலிபான்களின் உண்மை முகம் இன்னும் பலருக்குத் தெரியாது. அவர்கள் பெண்களைக் காயப்படுத்தி அதில் சந்தோசம் அடையும் கொடூர மனம் கொண்டவர்கள். அவர்கள் நாங்கள் பெண்களுக்குப் பாதுகாப்பும், அடிப்படை உரிமையும் வழங்குவோம் எனக் கூறுவது பெரும் வேடிக்கையாக உள்ளது.

ஒரு விமானியாகவும் ஆப்கானிஸ்தான் பெண்களுக்கான குரலாகவும் இருக்கப் பெருமைப்படுகிறேன். தற்போதைய சூழ்நிலையிலிருந்து ஆப்கானிஸ்தான் பெண்களை யாராவது காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கை மட்டுமே என்னிடத்தில் உள்ளது'' என வேதனையுடன் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்