அமெரிக்காவில் இந்த ஆண்டின் முதல் தண்டனை.... காதலிக்காக 25 வயதில் செய்த தவறு... இனி இவரை காப்பாத்த முடியாது!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்கா: காதலியை பிணையில் எடுக்க இரண்டு பேரை கொலை செய்து ஹோட்டலில் கொள்ளை அடித்த நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இந்த ஆண்டின் முதல் தண்டனை.... காதலிக்காக 25 வயதில் செய்த தவறு... இனி இவரை காப்பாத்த முடியாது!
Advertising
>
Advertising

அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்தில் வசித்து வந்தவர் டொனால்டு கிராண்ட். இவர் கடந்த 2001ம் ஆண்டு தனது 25 வயதில் ஹோட்டல் ஒன்றில் புகுந்து இரண்டு ஊழியர்களை கொலை செய்து பணத்தை கொள்ளையடித்தார். இதில், ஒரு ஊழியரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததுடன், மற்றொருவரை கத்தியால் குத்தி கொலை செய்தார். 

அமெரிக்க போலீஸ் விசாரணையில்,  ஜெயிலில் இருக்கும் அவரது காதலியை ஜாமீனில் எடுக்க பணம் தேவைப்பட்டதால் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.  நீதிமன்ற விசாரணை முடிவில் அவருக்கு நீதிமன்றம் கடந்த 2005-ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

First Execution Of 2022 Man Robbed Hotel For Girlfriend's Bail US

மரண தண்டனை விதிகப்பட்டதில் இருந்து அவர் தனது தண்டனையை ரத்து செய்ய பல முறையீடுகளை தாக்கல் செய்தார். பல்வேறு முறை தண்டனையில் இருந்து தப்ப மறுசீராய்வு மனு செய்திருந்த நிலையில் அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் போது, பாதிக்கப்பட்டவர்கள், செய்தியாளர்கள், டொனால்ட் கிராண்ட் உறவினர்கள் போன்றோர் அங்கிருந்தனர்.

புதுச்சேரி பியூட்டி பார்லர்ல இது புதுசாக இருக்கே.. பறந்த அலார்ட்.. தேடி போன போலீஸ்.. திகைத்து போன அழகிகள்

குற்றச் செயல்களை குறைக்க மரண தண்டனை அவசியம் என்பது ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர். மனிதநேயமற்ற செயல்களில் நாகரீக மனித சமூகம் ஈடுபடுவது அபத்தம் என்றும் குறிப்பிடுகின்றனர். மரண தண்டனைக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு நாடுகள் குரல் எழுப்பி வருகின்றன. அமெரிக்காவிலும்  மரண தண்டனை தொடர்பாக இருவேறு நிலைப்பாடுகள் இருந்து வருகிறது.

தற்போது, 46 வயதாகும் டொனால்ட் கிராண்ட்க்கு விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஓக்லஹோமா மாகாணத்தில் இந்த ஆண்டில் முதல் முறையாக இவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவின் 23 மாகாணங்களில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டுவிட்டன. ஆனால், கலிபோர்னியா, ஓரேகான், பென்சில்வேனியா ஆகிய  3 மாகாணங்கள் இந்த தண்டனையை ஒழிக்கும் தருவாயில் இருக்கின்றன. இருப்பினும் கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Prepaid Validity.. இனி 28 நாட்கள் மட்டும் போதாது.. டிராய் போட்ட சூப்பர் உத்தரவு.. மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்

FIRST EXECUTION OF 2022, GIRLFRIEND, US, DOUBLE-MURDER, அமெரிக்கா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்