48 மணிநேரத்தில் சூரியனை விழுங்கும் சக்தி கொண்ட ப்ளாக் ஹோல்.. முதல் முறையாக வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ப்ளாக் ஹோல் எனப்படும் கருந்துளையின் புகைப்படத்தை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர்.


ஈவென்ட் ஹாரிசன் டெலஸ்கோப் விஞ்ஞானிகள் எட்டு ரேடியோ டெலஸ்கோப்களை பயன்படுத்தி இரண்டு கருந்துளைகளைக் கண்டுபிடித்துள்ளனர். அதில் முதல் கருந்துளையான சாகிட்டாரிஸ் ஏ (Sagittarius A) சுமார் 26,000 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் மிகப்பெரிய கருந்துளை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதேபோல், இரண்டாவது கருந்துளை விர்கோ, விண்மீன் மண்டலத்தில் மிகப்பெரிய நீளமான M87 கோள்களுக்கு மையத்தில் அமைத்துள்ளதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த இரண்டு கருந்துளைகளின் ஈர்ப்பு சக்திகள் மிகவும் வலிமை வாய்ந்ததாக இருப்பதாகவும், சூரியன் போல் உள்ள நட்சத்திரங்களை வெறும் 48 மணி நேரத்தில் தன்வசம் ஈர்த்து இவை விழுங்கிவிடும் வல்லமை கொண்டவை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மறைந்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் இது தொடர்பாக பல ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

BLACKHOLEPICTURE

மற்ற செய்திகள்