ஒரு நாடு எங்களுக்கு உதவ முன்வந்திருக்காங்க.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த உக்ரைன் அதிபர்..!
முகப்பு > செய்திகள் > உலகம்உக்ரைன் நாட்டுக்கு ராணுவ உதவிகள் வழங்க முதல் நாடு முன்வந்துள்ளாதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடைபெற்று வருவது உலக நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த போரில் உக்ரைன் நாடு தனித்து விடப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் இன்று உருக்கமாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஸ்வீடன் அரசு உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை வழங்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தொழில்நுட்ப ரீதியிலான உதவிகளையும் ஸ்வீடன் அரசு செய்து கொடுத்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக நேட்டோ கூட்டமைப்பை சேர்ந்த நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தன. அதில் நேட்டோ கூட்டமைப்பை சேர்ந்த அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே பொருளாதார தடைகளை ரஷ்யா மீது விதித்துள்ளன.
ஆனால் இந்த நாடுகள் நேரடியாக ராணுவ படைகளையோ, உதவிகளையோ அனுப்பவில்லை என கூறப்படுகிறது. நேற்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய நேட்டோவின் பொதுச்செயலாளர், தற்போதைக்கு நேரடியாக ராணுவ படைகளை அனுப்புவதற்கான திட்டம் எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.
இந்த சூழலில் உக்ரைனுக்கு ராணுவ சார்ந்த உதவிகளை ஸ்வீடன் அரசு வழங்கியுள்ளது. ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு நேரடியாக ராணுவ உதவியை செய்யும் முதல் நாடு ஸ்வீடன் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சிவகார்த்திகேயன் எதிர்நீச்சல் படத்துல அவரு பேர சொல்லவே கூச்சப்பட்டாரு'ல... இங்க ஒரு கிராமமே ஊரு பேர் சொல்ல வெக்கப்படுது.. அப்டி என்ன பேரா இருக்கும்??
- 'கொரோனா வார்ட்டே கதியென கிடந்த செவிலியர்'... 'கிளவுஸ் எல்லாம் கழற்றிட்டு இந்த டிக்கெட்டை புடிங்க'... செவிலியருக்கு அடித்த ஜாக்பாட்!
- "ஒரு நேரத்தில்.. ஒரே ஒருத்தர் மட்டும் சாப்பிடும் ஹோட்டல்!"... 'கொரோனாவுக்கு' எதிரான 'சமூக விலகலின்' உச்சகட்ட 'யோசனை'!.. 'தம்பதிக்கு' குவியும் 'பாராட்டுகள்'!
- எங்க நாட்டுக்கு 'அதெல்லாம்' தேவையில்லை... கொரோனாவை 'வித்தியாசமாக' கையாளும் 'அரசு'... ஆய்வாளர்கள் 'எச்சரிக்கை'...
- 'என்னோட மக்கள நான் பாத்துக்குவேன்!'.. சொந்த நாட்டு மருத்துவமனையில்... சுகாதாரப் பணியாளராக வேலைக்குச் சேர்ந்த இளவரசி!