'சீனாவுக்கு முன்னாடியே’... ‘அந்த நாட்டில் கொரோனா வைரஸ் பரவலா?’... 'மருத்துவர் வெளியிட்ட பகீர் தகவல்'!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா தொற்று முதன்முதலாக சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் 31-ம் தேதி கண்டுப்பிடிக்கப்பட்டதாக இதுவரை கூறப்பட்ட நிலையில், டிசம்பர் 27-ம் தேதியே பிரான்சில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

முதன் முதலில் பிரான்சில் கடந்த ஜனவரி 24-ம் தேதி முதல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அந்நாடு அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது. அந்த 3 பேரில் 2 பேருக்கு, சீனாவின் வூஹான் நகருக்கு சென்றுவந்ததால் கொரோனா தொற்று ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், பிரான்சில் தீவிர சிகிச்சைப் பிரிவில் பணிபுரிந்து வரும் தலைமை மருத்துவர் Dr. Yves Cohen கோரிக்கையின் பேரில், அவரும் அவரது சக மருத்துவர்களும் ஒரு சோதனை மேற்கொண்டனர்.

அதன்படி அங்குள்ள அவிசென்னி (Avicenne) மற்றும் ஜீன் வெர்டியர் (Jean Verdier) மருத்துவமனைகளில், கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் நிமோனியா அறிகுறிகளுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த 24 பேரின் மாதிரிகளை மீண்டும் பரிசோதித்ததில் 42 வயது நபர் ஒருவருக்கு டிசம்பர் 27-ம் தேதியே கொரோனா தொற்று ஏற்பட்டதாக மருத்துவர்  Dr. Yves Cohen  கூறியுள்ளார். அந்த நபர் அண்மையில் சீனா உள்பட, கொரோனா வைரஸ் தொற்று பரவிய இடங்களுக்கு சென்றிருக்காத நிலையில்,  கொரோனா தொற்று எப்படி வந்தது என்பது புரியாத புதிராக உள்ளது.

எனினும் அவரது மனைவி விமான நிலையத்திற்கு அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வருவதால், அங்கு சீனாவில் இருந்த வந்த யார் மூலமாவது அவருக்கும், அவரது கணவருக்கும் ஏற்பட்டிருக்கலாம் என்று Dr. Yves Cohen கூறியுள்ளார். ஆனால் அவரது மனைவிக்கு கொரோனா அறிகுறி இல்லை. இதையடுத்து இவரைப் போல இன்னும் சிலருக்கு அங்கு டிசம்பரிலேயே கொரோனா வந்து இருக்குமா என்று ஆராய்ச்சி நடந்து வருகிறது. பிரான்சில் மட்டுமில்லை கலிஃபோர்னியாவில் டிசம்பர் இரண்டாம் வாரத்தில் இரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது, அவர்களுக்கு நடத்திய மறு பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக, சாண்டா கிளாரா கவுண்டியின் தலைமை செயலாளர் ஜெப் ஸ்மித் கூறியுள்ளார்.

இதையடுத்து பல நாடுகளில் நாம் நினைப்பதற்கு முன்பாகவே தொற்று பரவி இருக்கலாம் என்பதால், மூச்சு திணறல், காய்ச்சல், தொண்டை வறட்சி உள்ளிட்ட அறிகுறியுடன் வந்தவர்களின் மாதிரிகளை மறு சோதனைக்கு உட்படுத்துமாறு உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. ஏற்கனவே சீனாவில் டிசம்பருக்கு முன்னாடியே கொரோனா பரவல் இருந்தாக கூறப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்