'வாத்தியாரே பர்ஸ்ட் கிரைம்'... 'விண்வெளியில் தன்பாலின வீராங்கனை செய்த முதல் குற்றம்'... நாசா விசாரணை!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

விண்ணில் முதல்முறையாக நடத்தப்பட்ட குற்றம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுதொடர்பாக நாசா தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறது.

மெக்லைன் என்ற விண்வெளி வீராங்கனை தன்பாலின ஈர்ப்பாளர் ஆகும். இவருக்கும் சம்மர் வார்டன் என்ற பெண்ணுக்கும் கடந்த  2014ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதனிடையே இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட 2018 -ம் ஆண்டு இருவரும் சேர்ந்து விவாகரத்துக்கு விண்ணப்பித்தனர். இந்நிலையில் மெக்லைன் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஆய்விற்காக சென்று விட, அவர் மீது சம்மர் வார்டன் புகார் அளித்துள்ளார்.

வார்டன் அளித்துள்ள புகாரில் ''விண்ணில் இருந்தவாறு மெக்லைன் தனது பணத்தை திருடியுள்ளதாக'' பரபரப்பு புகாரை அளித்துள்ளார். இதனிடையே விண்ணில் இருந்து வங்கிக்கணக்கை இயக்கியதை ஒப்பு கொண்டதுடன், தாம் எந்த தவறும் செய்யவில்லை என மெக்லைன் கூறியுள்ளார். மேலும் வங்கி கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை மட்டுமே பார்த்தாக அவர் கூறியுள்ளார்.

இதனிடையே வார்டனும், மெக்லேனும் தம்பதிகளாக இருந்த போது ஒருங்கிணைந்த வங்கி கணக்கு ஒன்று உருவாக்கப்பட்டது. அதை மெக்லேன், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த போது கண்காணித்ததை தவிர எந்த தவறும் செய்யவில்லை’ என மெக்லேனின் வழக்கறிஞர் கூறியுள்ளார். இது குறித்து நாசா புலனாய்வாளர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இது உறுதி செய்யப்பட்டால் விண்வெளியில் இருந்தவாறு நடக்கும் முதல் குற்றமாக இது கருதப்படும்.

NASA, BANK ACCOUNT, CRIME IN SPACE, ANNE MCCLAIN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்