'திடீரென வெடித்துச்சிதறி தீப்பிடித்த கண்டெய்னர் கப்பல்'... 'நெருப்பு பிழம்பாக மாறிய துறைமுகம்'... அதிரவைக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் கப்பல் பயங்கரமாக வெடித்துச் சிதறி தீப்பிடித்து எரிந்தது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப்பெரிய நகரமான துபாயில் சரக்கு கப்பல் ஒன்று நெருப்பு கோளமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றான ஜெபெல் அலி துறைமுகத்தில் இருந்த அந்தக் கப்பலில் திடீரென வெடிச்சத்தம் கேட்டதையடுத்து, அது தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

மிகப்பெரிய கோள வடிவில் விண்ணை முட்டும் அளவுக்குத் தீப்பிழம்பு எரிய ஆரம்பித்தது. இதனால் துறைமுகத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள துபாய் நகரின் வானுயர்ந்த கட்டடங்களில் சுவர்களும் ஜன்னல்களும் அதிர்ந்ததால் மக்கள் பீதியில் உறைந்தனர். கப்பல் தீப்பிடித்து எரிந்த துறைமுகம் அமெரிக்கப் போர்க்கப்பல்களும் நிறுத்தி வைக்கப்படும் இடமாகவும் உள்ளது.

விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றபோதிலும், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் கப்பலில் இருந்ததா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இச்சம்பவத்தால் எந்த உயிர் ஆபத்தும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்