'பிஸியா இருந்த வேலை'...'காப்பாத்துங்கன்னு கேட்ட அலறல்'...'ஃபேன்' தொழிற்சாலையில் நடந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மின் விசிறி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 10 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்காளதேச தலைநகர் டாக்காவின் புறநகர் பகுதியான காசிப்பூரில் மின்விசிறிகள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. மிகவும் பிரபலமான இந்த தொழிற்சாலையில் ஏரளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை இந்த தொழிற்சாலையில் தொழிலாளர்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டு வந்தார்கள். அப்போது தொழிற்சாலையின் ஒரு பக்கத்தில் இருந்து, காப்பாத்துங்கன்னு தொழிலாளர்களின் அலறல் சத்தம் கேட்டது.

அந்த சமயத்தில் தொழிற்சாலையின் மற்றோரு பிரிவில் வேலை செய்துவந்த தொழிலார்கள், அலறல் சத்தம் கேட்டு ஓடி சென்று பார்த்தார்கள். அப்போது அங்கு பற்றி இருந்த தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. அது மற்ற பகுதிகளுக்கும் மளமளவென பரவியது. இதனால் பதறிப்போன தொழிலார்கள் அலறி அடித்து கொண்டு ஓடினார்கள்.

ஆனால் கொழுந்துவிட்டு எரிந்த தீ, சற்று நேரத்தில் தொழிற்சாலை முழுவதும் பரவி நாலாபுறமும் சூழ்ந்து கொண்டது. இதனால் தொழிலாளர்கள் வெளியே வரமுடியாமல் உள்ளே சிக்கிக்கொண்டனர். தீவிபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் தீயின் கோரப்பிடியில் சிக்கி 10 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும் பலர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

இதனிடையே வங்காளதேச முழுவதும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இந்த சம்பவமானது ஒரு வாரத்துக்குள் நடந்த 2-வது மோசமான தீ விபத்தாகும். கடந்த புதன்கிழமை டாக்கா அருகே கெரானிகஞ்ச் என்ற இடத்தில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 15 பேர் உடல் கருகி பலியானது குறிப்பிடத்தக்கது.

FIREACCIDENT, ACCIDENT, BANGLADESH, FAN FACTORY, DHAKA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்