எகிறும் கொரோனாவுக்கு மத்தியில் 'இப்படியொரு' துயரமா?... இனி அந்த 'கடவுள்' தான் எங்கள காப்பாத்தணும்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலக நாடுகள் அனைத்தையும் கொரோனா வைரஸ் கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. உலகளவில் சுமார் 43 லட்சம் பேர் கொரோனா வைரஸ் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொடிய வைரஸ் மூலம் ஏற்பட்ட உயிரிழப்பும் மூன்று லட்சத்தை நெருங்கி வருகிறது.

ரஷ்ய நாட்டில் ஆரம்பத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டிற்குள் இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா மூலம் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ரஷ்யாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக அங்கு கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த ஐந்து நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். வெண்டிலேட்டர் கருவி அதிக நேரம் பயன்பாட்டில் இருந்ததால் வெப்பமடைந்ததை தொடர்ந்து ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில், தீ பற்றி எரிந்துள்ளது. இதில் ஐந்து பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

தீயணைப்பு துறையினரின் உதவியால் 150 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் இதுவரை 2,32,243 பேர் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,116 பேர் உயிரிழந்தனர். உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் ரஷ்யா மூன்றாவது இடத்தில இருப்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்