திடீரென ‘வெடித்துச் சிதறிய’ டேங்கர்.. ‘மளமளவென’ பரவிய தீயால் ஏற்பட்ட பயங்கர விபத்தில்.. ‘23 பேர்’ பலி; ‘130 பேர்’ காயம்..
முகப்பு > செய்திகள் > உலகம்சூடானில் உள்ள செராமிக் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 23 பேர் பலியானதாகவும், 130 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சூடான் தலைநகர் கார்ட்டூமில் அமைந்துள்ள சலோமி செராமிக் தொழிற்சாலையில் நேற்று மாலை திடீரென எரிவாயு டேங்கர் வெடித்துள்ளது. இதனால் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இதில் காயமடைந்துள்ள 130 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
செராமிக் டைல்ஸ் உற்பத்தி பணிகளுக்காக டேங்கரிலிருந்து எரிவாயுவை எடுக்கும்போது திடீரென டேங்கர் வெடித்துள்ளது. இதையடுத்து எரிபொருள் வாயு நொடிப்பொழுதில் பீங்கான் தொழிற்சாலையின் பிற பகுதிகளையும் தாக்கியதால் தொழிற்சாலை தீப்பிடித்து எரிந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் அருகிலுள்ள மற்ற தொழிற்சாலைகளுக்கு தீ பரவுவதை போராடித் தடுத்துள்ளனர்.
சலோமி செராமிக் தொழிற்சாலையில் 50 இந்தியர்கள் வேலை செய்துவந்த நிலையில் உயிரிழந்த 23 பேரில் 18 பேர் இந்தியர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சென்னை ஏர்போர்ட் எதிரே பரபரப்பு..! மேம்பாலத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்..!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- ‘எலக்ட்ரிக் ஸ்டவ்வில் போதை ஜெல்’.. ‘பற்றி எரிந்த அறை’.. சென்னை விடுதியில் நடந்த பயங்கரம்..!
- Watch Video: நடுரோட்டில் திடீரென.. 'தீப்பற்றி' எரிந்த கார்.. பயணிகள் கடும் அதிர்ச்சி!
- 'பறந்துவந்து விழுந்த பாட்டில்'.. 'பற்றி எரிந்த பெண் காவலர்கள்'.. 'பதைபதைப்பு சம்பவம்'!
- 'நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து’... ‘எரிந்த சொகுசு கார்’... 'பதறிப்போன மருத்துவக் கல்லூரி மாணவர்'!
- 'எரித்துக் கொல்லப்பட்ட பெண் தாசில்தார்'.. பெட்ரோலுடன் பேச்சுவார்த்தைக்கு போன நபர் செய்த பரபரப்பு காரியம்!
- ‘திடீரென பற்றிய தீ’.. வீட்டில் சமைத்துக் கொண்டிருந்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்..! அதிர்ச்சி சம்பவம்..!
- ‘மனைவியின் தகாத உறவால்’.. ‘கணவர் எடுத்த விபரீத முடிவு’.. ‘மகள்களுக்கு நடந்த பயங்கரம்’..
- 'ரயிலுக்குள் பயணி செய்த காரியம்'.. அடுத்தடுத்து தீப்பிடித்த ரயில் பெட்டிகள்... 65 பேர் பலியான சோகம்!