'மனைவி கர்ப்பமா இருக்காங்களா'?... 'அடித்தது ஜாக்பாட்'... ஆண்களின் மனதை குளிரவைக்கும் அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

குழந்தை வளர்ப்பு என்றால் பெண்களுக்கு மட்டும் தான் பங்கிருக்கிறது என்பது அல்ல, ஆண்களுக்கும் அதில் பங்கிருக்கிறது, எனவே ஆண்களின் மனதை கவரும் அறிவிப்பு ஒன்றை பின்லாந்து அரசு வெளியிட்டுள்ளது.

பின்லாந்தில் இளம் வயது பிரதமராக பதவி ஏற்றிருக்கும் 34 வயதான சன்னா மரின், பல்வேரு அதிரடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தங்களது நாட்டில் பாலின சமத்துவம் எப்போதும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் அவர், பேறுகால விடுப்பு கொள்கையில் மாற்றம் கொண்டு வரப்படும் என அதிரடியாக அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக குழந்தை பிறப்புக்கு பின்பு, தாயை போல தந்தைக்கும் 164 நாட்கள் விடுப்புடன் கூடிய ஊதியம் வழங்கப்படும் என பின்லாந்து அரசு அறிவித்துள்ளது.

இந்த 164 நாட்கள் விடுப்பில் தாயோ அல்லது தந்தையோ 69 நாட்கள் விடுப்பை ஒருவருக்கொருவர் மாற்றி கொள்ளலாம். இதுவே தாய் அல்லது தந்தை ஒருவர் மட்டுமே இருக்கும் பட்சத்தில், அவருக்கு 328 நாட்கள் பேறுகால விடுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை வளர்ப்பில் நிச்சயம் ஆண்களின் பங்கும் இருக்க வேண்டும், அப்போது தான் வளரும் குழந்தைகள் சமூகத்தில் நல்ல மனிதர்களாக இருப்பார்கள். மேலும் பெண்களின் கஷ்டங்களையும் அவர்கள் உணர்ந்து கொள்வார்கள் என பின்லாந்து அரசு தெரிவித்துள்ளது.

நல்லதொரு சமுதாயம் அமைவதோடு, குடிமக்களின் நலனும் முக்கியம் என செயல்படும் பின்லாந்து அரசுக்கு நாமும் ஒரு சலுயுட் போடலாம். அரசின் இந்த நடவடிக்கைக்கு உங்களின் கருத்து என்னவென்பதை கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் செய்யலாம்.

PARENTAL LEAVE, FINLAND, FAMILY ALLOWANCE, PREGNANT WOMEN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்