என்னது?.. இவ்ளோ செலவாகுமா?.. கடுப்பில் 'டெஸ்லா' காரை வெடிக்க வைத்த 'உரிமையாளர்'.. வைரல் 'வீடியோ'..
முகப்பு > செய்திகள் > உலகம் உலக அளவில், ஆட்டோமொபைல் துறையில் முன்னணியில் உள்ள நிறுவனம் டெஸ்லா ஆகும். இதன் நிறுவனரான எலான் மஸ்க், உலக கோடீஸ்வரர்களில் ஒருவராவார்.
உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான இந்த டெஸ்லா நிறுவனத்தின் கார் ஒன்றை, அதன் உரிமையாளர் வெடி வைத்து தகர்க்கும் காட்சி தொடர்பான வீடியோ, இணையதளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது. பின்லாந்து நாட்டின் கிம்மென்லாக்சோ என்ற இடத்தில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
டூமாஸ் கடாயினன் (Tuomas Katainen) என்பவர், தனக்கு சொந்தமான டெஸ்லா கார் ஒன்றை சில நாட்களுக்கு முன் பழுது பார்க்க வேண்டி, சர்வீஸ் நிறுவனம் ஒன்றில் ஒப்படைத்துள்ளார். அவரது காரினை பல நாட்கள் பரிசோதித்த மெக்கானிக்குகள், அதனை சரி செய்ய வேண்டுமென்றால் 20,000 யூரோக்கள் (இந்திய மதிப்பில் சுமார் 17 லட்ச ரூபாய்) செலவாகும் என தெரிவித்துள்ளார்.
தனது காரை சரி செய்ய இவ்வளவு பணம் தேவைப்படும் என்பதால் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்ற அவர், அதை சரி பார்ப்பதற்க்கு பதிலாக வேறொரு திட்டம் போட்டுள்ளார். காரினை வெடி வைத்து தகர்க்க திட்டமிட்ட டூமாஸ், பின்னர் நண்பர்களை அழைத்து அதற்கான பணிகளையும் செய்துள்ளார். சுமார் 30 கிலோ டைனமைட் பொருட்கள் கொண்டு வரப்பட்டு, காரைச் சுற்றிக் கட்டப்பட்டது. அதிக ஆள் நடமாட்டம் இல்லாத பனிப்பிரதேச பகுதியில், காரினை நிறுத்தி அதன் பிறகு வெடிக்கச் செய்தார்.
இந்த வீடியோவை, யூடியூப் சேனல் ஒன்றின் மூலம் பல்வேறு கோணங்களில் படம்பிடித்து வீடியோவாகவும் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காரின் உரிமையாளர் டூமாஸ் கடாயினன் கூறுகையில், 'நான் டெஸ்லா காரை வாங்கிய போது, முதல் 1500 கிமீ தூரம் நன்றாக ஓடியது. ஆனால், அதன் பிறகு சரியாக இயங்கவில்லை. எனவே, காரை பழுது பார்க்கும் நிறுவனம் ஒன்றில் அதனை ஒப்படைத்தேன். கிட்டத்தட்ட ஒரு மாத காலம் வரை எனது கார் அங்கேயே இருந்தது. இறுதியில், அதனை சரி செய்ய வேண்டுமென்றால் முழு பேட்டரியை மாற்றுவது தான் ஒரே வழி என்று கூறினர். அதற்கு எல்லாம் சேர்த்து மொத்தமாக 20,000 யூரோக்கள் வரை செலவாகும் என்றும் கூறினர். அதிக விலையின் காரணமாக, எனது காரை வெடி வைத்து தகர்க்க முடிவு செய்தேன்' என தெரிவித்துள்ளார்.
டெஸ்லா காரை அதன் உரிமையாளர் வெடிக்க வைத்த வீடியோ, இணையத்தில் வெளியான சில மணி நேரங்களிலேயே பல லட்சத்திற்கும் அதிகமான பாரவையாளர்களைக் கடந்து வைரலானது குறிப்பிடத்தக்கது.
FINLAND, TESLA, CAR, டெஸ்லா, பின்லாந்து
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பாருங்கப்பா, இது தான் நான் 'வரி' செலுத்த போற தொகை...! வரியே இவ்வளவுன்னா வருமானம்...? - 'மாஸ்' காட்டும் எலான் மஸ்க்...!
- VIDEO: ஒரு கோடி கொடுத்து ஆசையா வாங்கிய 'டெஸ்லா' காரை 'தீ' வச்சு கொளுத்திய நபர்...! என்ன காரணம்...? - டிரெண்டிங் வீடியோ...!
- 'டோஜ்காயின்' பத்தி எலான் மஸ்க் சொன்ன விஷயம்...! கொஞ்சம் நேரத்துல அதோட 'மதிப்பு' உயர்ந்திடுச்சு...! - பரபரப்பு பேட்டி...!
- உலகப் பணக்காரர்களுள் ஒருவரா இருந்திட்டு இப்டி கடைசி வீட்டையும் வித்துட்டீங்களே சார்..!
- 'இதை' மனசுல வச்சுக்கங்க.. ஆறு குழந்தைகளின் அப்பா எலான் மஸ்க் சொல்றத கேளுங்க!
- என்ன எலான் மஸ்க்கோட மண்ட ஒரு ‘திணுசா’ இருக்கு.. இதுக்கு அவர் சொன்ன பதில்தான் அல்டிமேட்..!
- 'டிகிரி' எல்லாம் தேவையில்லங்க...! உங்களுக்கு 'டேலன்ட்' இருக்கா...? - எலான் மஸ்க் வெளியிட்ட 'முக்கிய' அறிவிப்பு...!
- VIDEO: ‘அய்யோ அந்த காரை எப்படியாவது நிறுத்துங்க’!.. கட்டுப்பாட்டை இழந்து ஓடிய கார்.. வேறலெவல் ‘ஐடியா’ செய்து நிறுத்திய இளைஞர்..!
- 'அவரு மேல இடிச்சிட கூடாதேன்னு...' 'திடீர்னு கார திருப்பினப்போ...' 'ஒரே செகண்ட்ல எல்லாம் முடிஞ்சு போச்சு...' - ஒரே நாளில் 'மிஸ் கேரளா' ஆன அழகிகளின் சோக முடிவு...!
- 'அப்படி என்ன நடந்தது ஆபீஸ்ல'... 'முன்னாள் ஊழியருக்கு 1000 கோடி ரூபாய் இழப்பீடு'... ஆடிப்போன டெஸ்லா நிறுவனம்!