மேஜைக்கு அடியில வச்சு.. கைதிக்கு 'லிப்லாக்' கிஸ் கொடுத்த பெண் நீதிபதி! வெளிவந்துள்ள சிசிடிவி காட்சிகள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அர்ஜென்டினா: அர்ஜென்டினாவில் பெண் நீதிபதி ஒருவர், போலீஸ் அதிகாரியை கொடூரமாக கொன்ற நபருக்கு ஆயுள் தண்டனையை ரத்து செய்யுமாறு வாக்களித்தது ஏன் என்பது தொடர்பாக வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது

Advertising
>
Advertising

அர்ஜென்டினாவை சேர்ந்த காவல் துறை அதிகாரியான லியாடிரோ ராபர்ட்ஸ் என்பவரை அதே நாட்டை சேர்ந்தவர் கிறிஸ்டைன் புஸ்டோஸ் என்ற ரவுடி கடந்த 2009 ஆம் ஆண்டு கொடூரமாக கொன்றுள்ளார்.

கொடூர குற்றவாளி:

பிரபல ரவுடியான வாகிறிஸ்டைன் புஸ்டோஸ்ஸை பிடிக்க சென்ற போது தான் இந்த கொடூர நடந்துள்ளது. போலீஸ் அதிகாரியான லியாடிரோவை புஸ்டோஸ் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அர்ஜென்டினாவை உலுக்கியது. அதோடு, தீவிர விசாரணைக்கு பிறகு புஸ்டோஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த  நிலையில் புஸ்டோஸுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், தனது தண்டனையை எதிர்த்து புஸ்டோஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்த நிலையில் நீதிபதிகள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தி ஆயுள் தண்டனை குறித்து முடிவெடுக்க அறிவுறுத்தப்பட்டது.

ஆயுள் தண்டனை வழங்க வேண்டும்:

குழுவில் உள்ள நீதிபதிகள் புஸ்டோஸுடம் விசாரணை நடத்தியதில் அவர் லியாடிரோவை சுட்டுக் கொன்றதை ஒப்புக் கொண்டார். மேலும் புஸ்டோஸுக்கு ஆயுள் தண்டனை விதிப்பது சரியான முடிவு என வாக்களித்தனர்.

அதோடு, புஸ்டோஸ் மிகவும் ஆபத்தான நபர் என்பதால் அவரை வெளியில் விட்டால் நிறைய குற்றங்களை செய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தனர். ஆனால் இந்த நீதிபதிகள் குழுவில் இருந்த மரியல் சுவாரெஸ் எனும் பெண் நீதிபதி, புஸ்டோஸுக்கு ஆயுள் தண்டனை கொடுக்கக் கூடாது என வாக்களித்தார்.

தண்டனை காலத்தை குறைக்க வேண்டும்:

தற்போது அந்த குழுவில் உள்ள ஒரு பெண் நீதிபதி புஸ்டோஸ்க்கு ஆதரவாக அளித்த ஓட்டு தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் அவரின் தண்டனை காலத்தை மேலும் குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்நிலையில் இத்தனை கொடூர குற்றவாளிக்கு மரியல் பரிந்து பேசுவது ஏன் என நீதிபதிகளுக்குள் கேள்வி எழுந்தது. இதுக்குறித்து வழக்கின் கவனம் பெண் நீதிபதி மேல் திரும்பியது. மேலும் புஸ்டோஸ் அடைக்கப்பட்டிருந்த சிறையில் நடந்த சம்பவங்கள் சிசிடிவி காட்சிகள் மூலம் பார்க்கப்பட்டது.

முத்தம் கொடுத்த வீடியோ காட்சிகள்:

அதில், புஸ்டோஸிடம் விசாரிக்க வந்த மரியல் அவருடன் முத்தம் கொடுத்த காட்சிகள் பதிவானதை அடுத்து அதிர்ந்து போன அவர் நீதிபதிகள் குழுவிடம் சிசிடிவி காட்சிகளை ஒப்படைத்தார். இதுக்குறித்து, மரியல் கூறுகையில் நான் சிறைக் கைதியை முத்தமிடவில்லை. நாங்கள் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படுகிறோம் என தெரிந்தும் எப்படி செய்வோம்? மேலும் புஸ்டோஸ் இருந்த சிறையை சுற்றிலும் போலீஸ் நடமாட்டம் இருந்தது.

புத்தகம் எழுத முடிவு:

மேலும், அவர் குறித்து நான் ஒரு புத்தகம் எழுத முடிவு செய்தேன். அது குறித்து அவரிடம் பேசுவதற்காக அருகில் சென்று நெருக்கமாக பேசினேன். மற்றபடி நான் எந்த தவறையும் செய்யவில்லை. எங்களுக்குள் எந்த உணர்வுபூர்வமான உறவுகள் இல்லை. எல்லாமே பணி நிமித்தமானதுதான் என மரியல் ஒரே போடாக போட்டார். இந்த சம்பவம் தற்போது அர்ஜென்டினாவில் பெரிய பேசுப்பொருளாக உள்ளது.

JUDGE, KISS, CRIMINAL, ARGENTINA, அர்ஜென்டினா, பெண் நீதிபதி, முத்தம், குற்றவாளி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்