'அமெரிக்காவில் கௌரவிக்கப்பட்ட இந்திய டாக்டர்...' 'தன்னலமற்ற சேவைக்கு தலை வணங்குகிறோம்...' 'சைரன்சர் சத்தத்துடன் நன்றி சொன்ன போலீசார்...' வைரல் வீடியோ...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியாவின் மைசூரை சேர்ந்த பெண் மருத்துவரின் வீட்டுக்கு வெளியே போலீசார் கார்களில் சென்று மரியாதை செலுத்தும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உலகையே நடுக்கம் காண வைத்துள்ளது கோவிட் 19 என்னும் கொரோனா வைரஸ் தொற்று. உலக அளவில் சுமார் 25 லட்சத்து எழுபதாயிரம் பேருக்கு மேல் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் கிட்டத்தட்ட 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 178,550 ஆகும்.

கொரோனா வைரஸ் பாதித்த உலகநாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது அமெரிக்கா. இங்கு சராசரியாக 819,175 மக்கள் பாதித்துள்ளனர். பலி எண்ணிக்கையும் 45,300 கடந்துள்ளது. தன்னுடைய வாழ்க்கையினை பணயம் வைத்து  அமெரிக்க மக்களுக்கு இரவு பகல் பாராமல் மருத்துவர்கள் சேவை ஆற்றி வருகின்றனர். அந்த அர்ப்பணிப்பு உள்ள சேவையினால் தான் மக்கள் அச்சமின்றி இருக்க முடிகிறது, எனவே போலீசார் இவர்களுக்கு தங்களால் இயன்ற முறையில் நன்றி செலுத்தினர். இவ்வாறு இந்தியாவில் இருக்கும் மைசூரை சேர்ந்த பெண் டாக்டர் பாராட்டை பெற்றுள்ளார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அமெரிக்காவில் உள்ள Windsor என்ற மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார் இந்தியாவின் மைசூரை சேர்ந்த உமா மதுசூதனன். இவரது தன்னலமற்ற மருத்துவ சேவையை பாராட்டும் விதமாக அப்பகுதியை சேர்ந்த போலீசார் மருத்துவரின் வீட்டு வாசலில் தங்களுடைய காரை கொண்டு அணிவகுப்பு போல நடத்தி கையசைத்து நன்றிகளை தெரிவித்தனர்.

அவர்களுக்கு பின்புறம் தீயணைப்பு வாகனங்களும் அதன் சைரன்சர் சத்தத்துடன் உமா மதுசூதனுக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் உரித்தாக்கினர். வைரலான இந்த வீடியோவை திரைப்பட நடிகர் அடில் உசைன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்