'பறந்துவந்து விழுந்த பாட்டில்'.. 'பற்றி எரிந்த பெண் காவலர்கள்'.. 'பதைபதைப்பு சம்பவம்'!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கடந்த 2 வாரங்களில் மட்டும் சிலியில் போராட்டக் காரர்கள் மீது ரப்பர் குண்டுகள் வீசியதால் 1650 போராட்டக் காரர்களும், போலீஸார் மீது தாக்குதக் நடத்திய போராட்டக் காரர்களால் 800 காவலர்களும் படுகாயமடைந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

லத்தீன் நாடான சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோவில் மெட்ரோ ரயில் கட்டண உயர்வைத் தொடர்ந்து தொடங்கிய போராட்டம் இன்னும் ஓயவில்லை. தங்கள் நாட்டு பணமான பெசோவின் மதிப்பு குறைந்ததும், கச்சா எண்ணெயின் விலை உயர்வும்தான் இந்த மெட்ரோ ரயில் கட்டண உயர்வுக்கு காரணம் என்று அந்நாட்டு அரசு கூறியும் சமாதானம் ஆகாத மாணவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.

இதனால் 164 மெட்ரோ நிலையங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. நாட்டில் எமர்ஜென்ஸி அமல்படுத்தப்பட்டது. ராணுவத்தின் கைகளில் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில்தான் பாக்குயீடனோ மெட்ரோ ரயில் நிலையத்தில் போராட்டத்தை சமாளித்துக்கொண்டிருந்த 2 பெண் காவலர்கள் மீது போராட்டக் காரர்கள் ரசாயன கண்ணீர்ப் புகைக் குண்டு பாட்டில்கள் வீசினர். இதனால் அப்பெண்கள் அந்த இடத்திலேயே எரியத் தொடங்கினர்.

இந்த வீடியோ முக்கிய புகைப்பட பத்திரிகையாளர்  ஒருவரால் எடுக்கப்பட்டு, இணையதளத்தில் பரபரப்பை கிளப்பி வருகிறது.

FIREACCIDENT, CHILEAN, POLICE, WOMAN, MOLOTOVCOCKTAIL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்