"லாக்டவுன்ல செம்ம போர் அடிக்குதுப்பா!".. செல்ல 'மகளை' சமாதானப்படுத்த.. 'அப்பாவின்' அகில உலக 'ஐடியா'! வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு வரும் கிரியேட்டிவிட்டுக்கு அளவே இல்லை என்று சொல்லலாம். அப்படியான ஒரு சிறப்பான சம்பவம் ட்விட்டரில் வீடியோவாக வலம் வருகிறது.

கொரோனா உலகளவில் 50 லட்சம் பேரை தாக்கியுள்ள நிலையில், மூன்றரை லட்சம் பேரின் உயிரை கிட்டத்தட்ட பறித்துள்ளது. இதனால் முதல் நடவடிக்கையாக கொரோனா பரவலைத் தடுத்து கட்டுப்படுத்தியாக வேண்டும் என்கிற முனைப்பில் உலகநாடுகள் ஊரடங்கையும் பொது முடக்கத்தையும் தொடர்ந்து பல மாதங்கள் அமல்படுத்தி வருகின்றனர்.

இந்த கொடிய நோயான கொரோனாவை விரட்ட, ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட இந்த காலங்கள், குறைந்த காலங்கள்தான் என்றாலும், அதற்குள் பலருக்கும் போர் அடித்துள்ளது. குறிப்பாக குழந்தைகள் பொழுதுபோக்கினையே பெரிதும் நாடுபவர்கள் என்பதால், வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்ததால் போரின் உச்சத்துக்கு சென்றுள்ளனர். 

அப்படித்தான் போரடித்துப் போனதாக உணர்ந்த, தனது குட்டி மகளை குஷிப்படுத்த அப்பா ஒருவர், தினமும் விதவிதமான குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த காமிக்கல், அனிமேஷன் மற்றும் சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களின் ஐகானிக் ஆடையை தானும் அணிந்தபடி, அதற்கு மேட்சிங்கான  வேறொரு கேரக்டரின் ஆடையை தனது செல்ல மகளுக்கு அணிந்தபடி வெளியில் அழைத்துச் சென்றுவிட்டு

அழைத்துவருகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்