'பால்' குடின்னு சொன்னா'... 'கேக்க மாட்டியா'?... 'வளர்ப்பு தந்தை' செய்த கொடூரம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

குழந்தையை கொன்று விட்டு நாடகமாடிய கேரள இளைஞருக்கு, ஆயுள் தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வருபவர் வெஸ்லி மாத்யூஸ். கேரளாவை சேர்ந்த இவர் மனைவி சினியுடன் வசித்து வந்தார். இந்த தம்பதி கடந்த 2016 ஆம் ஆண்டு, பீகாரில் உள்ள அனாதை இல்லம் ஒன்றில் இருந்து, ஷெரின் என்ற 3 வயது குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வந்தனர். இதனிடையே கடந்த 2017-ம் ஆண்டு குழந்தையை காணவில்லை என வெஸ்லி மாத்யூஸ் காவல்துறையில் புகார் அளித்தார்.

இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஷெரின் பால் குடிக்காததால் தண்டனைக்காக வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், அதன் பின், மாயமானதாகவும் முதலில் கூறப்பட்டது. இந்நிலையில் குழந்தை காணாமல் போன இரண்டு வாரங்கள் கழித்து, மேத்யூஸ் வீட்டில் இருந்து சிறிது தொலைவில் இருந்த சுரங்க பாதையில் சிறுமியின் சடலத்தை காவல்துறையினர் மீட்டனர்.

இதையடுத்து பால் குடிக்கும் போது மூச்சுத்திணறி இறந்ததாக, வெஸ்லியின் மனைவி சினி கைதானார். ஆனால் அவருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என்பதால் அவர் 15 மாத சிறை தண்டனைக்குப் பின் விடுவிக்கப்பட்டார். இதனிடையே குழந்தையை வெஸ்லி மேத்யூஸ் அடித்துக் காயப்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து குழந்தை ஷெரினை அடித்து கொன்றதை வெஸ்லி மாத்யூஸ் ஒப்பு கொண்டார். இதையடுத்து அவரை குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது. குற்றத்தை ஒப்புக்கொண்டதால், அவருக்கு குறைவான தண்டனை கிடைக்கும் என்று கூறப்பட்ட நிலையில், வெஸ்லி மாத்யூஸுக்கு ஆயுள் தண்டனை அளித்து டெக்சாஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

MURDER, SHERIN MATHEWS, INDIAN-AMERICAN, FOSTER, JAIL FOR DEATH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்