'இது தந்தையின் தாலாட்டு'.. குழந்தையின் முதல் பிறந்த நாளுக்கு தந்தையின் 'இப்படி' ஒரு பரிசு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பெற்றோர்கள் பலருக்கும் குழந்தையே ஒரு பரிசுதான் என்கிற நிலையில், தன் குழந்தையின் முதல் பிறந்த நாளுக்கு அமெரிக்காவைச் சேர்ந்த தந்தை லீ உருவாக்கித் தந்துள்ள பரிசு இணையத்தில் வைரலாகிறது.

குழந்தை எப்படியெல்லாம் தூங்குகிறது. எவ்வளவு நேரம் விழிக்கிறது, என்பவற்றை நேரம், உறக்கத்தின் விகிதம் உள்ளிட்ட பலவற்றின் அடிப்படையில் கண்காணிக்கும் தொழில்நுட்பம் கொண்டு, ஜாவா மற்றும் பைத்தான் மென்பொருள்களின் உதவியுடன் லீ, தன் குழந்தைக்கான ஸ்லீப்பிங் பிளாங்கெட்டை உருவாக்கியுள்ளார்.

இடையில் குழந்தையின் பிறந்த நாளுக்காக வெளிநாட்டுக்குச் சென்றபோதும் கூட, அதன் விகிதம் பதிவாக வேண்டும் என்பதில் லீ கவனமாக இருந்துள்ளார். ஒட்டொமொத்தமாக, 1 லட்சத்து 85 ஆயிரம் வரையில் ஸ்ட்ரெச்சிங் இருக்கும் இந்த பிளாங்கெட்டின் நீளம் 45 இன்ச் இருக்கும் என தெரிகிறது.

குழந்தையின் முதல் பிறந்த நாளுக்கு இதை பரிசாகத் தந்து, இப்படித்தாண்டா கண்ணா இந்த ஒரு வருடம் நீ தூங்குன என்பதற்கான ரிப்போர்ட்டை உருவாக்கும் விதமாக, இந்த தந்தை தனது அளவுகடந்த அன்பையும் வெளிப்படுத்தியுள்ளார். இதற்கு அவர் இரவு பகலாக 3 மாதங்கள் எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

BABY, FATHER, BIRTHDAY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்