பட்டமளிப்பு விழாவுக்காக மேடை ஏறிய வாலிபர்.. அரங்கில் கேட்ட திடீர் சத்தம்.. "என்ன ஒரு 'நெகிழ்ச்சி' மொமெண்ட்"

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஒருவரின் கல்லூரி படிப்பு முடிவடைந்த பிறகு, தாங்கள் தேர்ச்சி பெற்றதற்காக பட்டம் கிடைப்பதற்கு பட்டமளிப்பு விழா நடைபெறும்.

Advertising
>
Advertising

அப்போது, தன்னுடைய சக மாணவ மாணவிகள்  மற்றும் பேராசிரியர்கள் முன்னிலையில், மேடை ஏறி கோட் அணிந்து கொண்டு, ஒரு முதிர்ந்த இளைஞராக நிற்கும் போதே, மனதில் ஒரு வித புத்துணர்ச்சி ஒட்டிக் கொள்ளும்.

அந்த வகையில், பட்டமளிப்பு விழா தொடர்பான சம்பவமும், அதன் பின்னால் உள்ள சுவாரஸ்யம் தொடர்பான வீடியோவும் இணையத்தில் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

பொதுவாக, ஒரு நபர் பட்டமளிப்பு விழாவில் மேடை ஏறி சென்றால், அவருக்காக பெற்றோர்கள் ஆர்ப்பரித்து கைத்தட்டி வரவேற்பதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இங்கோ கொஞ்சம் எதிர்மறையாக அந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. ஆம், வாலிபர் ஒருவர் பட்டமளிப்பு விழாவின் போது மேடை ஏறி செல்லவே, அரங்கில் இருந்த அவரது சுட்டி மகள், "வாழ்த்துக்கள், டாடி" என கத்துகிறார்.

இதனைக் கேட்டதும் அரங்கம் முழுவதும் சிரிப்பலை நிரம்பியது. இதற்கு சிரித்துக் கொண்டே அந்த வாலிபரும், மகளுக்கு முத்தம் ஒன்றை கொடுத்து, "ஐ லவ் யூ" என மேடையில் இருந்தே கூற, இதற்கும் அவரது மகள், "ஐ லவ் யூ டாடி" என கத்தி பதில் கூறுகிறார். இந்த வீடியோ தான், தற்போது பலரையும் வெகுவாக ஈர்த்து, அவர்களை மெய் சிலிர்க்கவும் வைத்துள்ளது.

இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த அந்த வாலிபர், "எனது குட்டி தேவதை இல்லாமல், பட்டமளிப்பு விழா சிறப்பாக இருந்திருக்காது. மெளனமாக இருந்த இடத்தில் அவரது வாழ்த்தினை கேட்டதும், அங்கிருந்த அனைவருடன் எனது இதயமும் உருகியது. பட்டமளிப்பு விழாவை விட எனது மகளுக்கு தந்தையாக இருப்பதே பெரிய சாதனையாக நான் கருதுகிறேன். அவர் தான் இந்த உலகின் சிறந்த மகள். எனது மொத்த பட்டமளிப்பு விழாவிலும் இந்த க்யூட்டான தருணம், என்றென்றும் எனது இதயத்தில் நிலைத்து நிற்கும் அழகான தருணமாகும்" என மனம் உருகி குறிப்பிட்டுள்ளார்.

அவர் பகிர்ந்த வீடியோவும் தற்போது சுமார் ஒரு மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து வைரலாக பரவி வருகிறது.

 

FATHER, DAUGHTER, GRADUATION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்