மரம் நடலாம்னு குழி தோண்ட போனவருக்கு காத்திருந்த ஷாக்.. போட்டோவை இணையத்துல ஷேர் பண்ணப்போ தான் உண்மையே தெரியவந்திருக்கு..!
முகப்பு > செய்திகள் > உலகம்பாலஸ்தீனில் மரம் நடச் சென்ற விவசாயி ஒருவர் பழங்கால மொசைக் தரைகளை கண்டுபிடித்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
Also Read | இன்ஸ்டாகிராமில் இருந்த பிழை.. சுட்டிக்காட்டிய இந்திய மாணவனுக்கு கிடைச்ச தாறுமாறான பரிசுத்தொகை..!
மரம்
பாலஸ்தீனில் இயங்கிவரும் புரேஜ் அகதிகள் முகாமில் வசித்துவருகிறார் சல்மான் அல்-நபாஹின். இஸ்ரேல் எல்லையில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த அகதிகள் முகாம் அருகே விவசாய நிலங்கள் இருக்கின்றன. இதில் மரங்களை நட்டு வளர்த்துவருகிறார் சல்மான். ஆனால் சமீப காலங்களில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் அவர் வைத்த மரங்கள் வேர்விடாமல் இருப்பதை அறிந்த சல்மான், அதற்கான காரணத்தை கண்டுபிடிக்க முயற்சித்திருக்கிறார். ஆறு மாதங்களுக்கு முன்னர் ஆலிவ் மரம் ஒன்றை நட சல்மான் முடிவு செய்திருக்கிறார்.
சத்தம்
அப்போது தனது மகனை குழி வெட்டும்படி சொல்லியிருக்கிறார் சல்மான். குழி தோண்டப்படும் வேளையில் வித்தியாசமான சத்தம் எழுந்திருக்கிறது. இதனால் ஆச்சர்யப்பட்டுப்போன சல்மான் கவனமாக அருகில் இருந்த இடத்தை சுத்தம் செய்திருக்கிறார். அப்போது தான் பூமிக்கு அடியே வித்தியாசமான தரைப்பரப்பு இருப்பதை அவர் கண்டுபிடித்திருக்கிறார். கொஞ்ச நேரத்தில் அந்த பகுதி முழுவதிலும் இதுபோன்ற தரைப்பரப்பு இருப்பதை அறிந்து திகைப்படைந்திருக்கிறார் சல்மான்.
மொசைக் தரைகள்
பின்னர் இந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு இதுகுறித்து தேடியுள்ளார். அப்போதுதான் அது பைஸாந்திய காலத்து மொசைக் தரைகள் என்பது அவருக்கு தெரியவந்திருக்கிறது. இந்த தரையில் பறவைகள் மற்றும் விலங்குகளின் உருவங்கள் தத்ரூபமாக பொறிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய சல்மான்,"நான் இதுபற்றி இணையத்தில் தேடினேன். அது பைஸாந்திய காலத்தைச் சேர்ந்த மொசைக் என்று நாங்கள் அறிந்தோம். இது புதையலைவிட மேலானது. இது எனக்கு மட்டும் அல்லது ஒவ்வொரு பாலஸ்தீன குடிமகனுக்கும் சொந்தமானது" என்றார்.
பைஸாந்திய காலத்தில் மக்களின் வாழ்க்கை முறை அப்போது வாழ்ந்த விலங்குகள் மற்றும் பறவைகளை பற்றி அறிய இந்த தளம் உதவும் என பாலஸ்தீனிய சுற்றுலா மற்றும் தொல்பொருட்கள் அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. "இப்பகுதியில் தொல்லியல் கண்டுபிடிப்புகள் இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளது. மேலும் பல ரகசியங்கள் மற்றும் பழங்கால நாகரீகங்கள் குறித்து அறிய நாங்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்," என்று அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "ஊருல மழையே இல்ல.." புகார் கொடுத்த விவசாயி.. "யார் மேல Complaint'ன்னு பாத்தா.." பரபரப்பை உண்டு பண்ணிய கடிதம்
- எல்லாரும் கட்டுக்கதைன்னு நினைச்சாங்க.. 650 வருஷத்துக்கு முன்னாடி கடலுக்குள் மூழ்கிப்போன பிரம்மாண்ட நகரம்.. தானாகவே மேலே வந்த அதிசயம்?..!
- என்ன நம்ம பேங்க் அக்கவுண்ட்ல ரூ.15 லட்சம் வந்திருக்கு.. சந்தோஷத்தில் புது வீடு கட்டிய விவசாயி.. 6 மாசம் கழிச்சு வந்த அதிர்ச்சி தகவல்..!
- ஷோரூமில் விவசாயிக்கு நேர்ந்த துயரம்.. நேரடியாக இறங்கிய ஆனந்த் மஹிந்திரா.. அதிரடி ஆக்ஷன்
- நான் மனுஷங்க மேல 'கம்ப்ளைன்ட்' கொடுக்க வரல சார்...! 'நாலு பசுமாடுகளை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்த விவசாயி...' - 'புகாரை' கேட்டு ஆடிப்போன போலீசார்..!.
- எல்லாரும் சீக்கிரம் ஓடி வாங்க...! இது 'என்ன'னு தெரியுதா...? பார்க்க 'அது' மாதிரியே இருக்கு இல்ல...! எப்படி இந்த 'வடிவத்துல' ஆச்சு...? - குழம்பிய விவசாயிகள்...!
- 'இப்படி ஒரு காய்கறி இருக்குன்னே யாருக்கும் தெரியல...' 'ஒரு கிலோ ஒரு லட்சம் ரூபாய்...' 'இதுக்கு செம டிமான்ட்...' இதுல அப்படி என்ன இருக்கு...? - மாஸ் காட்டும் இளைஞர்...!
- 'மண்வெட்டி பிடிச்ச கை இது...' 'எதுக்கும் பயப்பட மாட்டேன்...' 'விவசாயிகளுக்காக வந்த ஒரே முதல்வர் நான் தான், அதுக்கு காரணம்...' - தமிழக முதல்வர் அதிரடி பேச்சு...!
- ‘ரொம்ப லேட் ஆகுது’!.. வேற வழியில்ல வாங்கிற வேண்டியதுதான்.. அன்னாந்து பார்க்க வச்ச விவசாயி..!
- ‘முதலமைச்சர் என்பது அடுத்த கட்டம்... இதுதான் எனக்கு முதலில்!’... முதல்வர் எடப்பாடி பழனிசாமி ‘பளிச்’ பதில்கள்!