'வயித்துல ஆபரேஷன் பண்ணுனா'... 'தொண்டையில இப்படியா சிக்கணும்'... அதிர்ந்து போன மருத்துவர்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அறுவை சிகிச்சையின் போது, முதரியவரின் பல் செட் தொண்டையில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனை சேர்ந்த 77 வயது முதியவர் ஜாக். இவருக்கு வயிற்றில் கட்டி இருந்ததால் சில மாதங்களாக அவதிப்பட்டு வந்தார். இதனால் அறுவை சிகிச்சை மூலம் அதனை அகற்ற முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, ஒரு வாரம் ஓய்வில் இருந்தார். இதையடுத்து வீட்டிற்கு சென்ற அவருக்கு தொண்டையில் தீராத வலி ஏற்பட்டது. ஜாக்கால், எதையும் சாப்பிடவோ, படுக்கவோ முடியவில்லை. இதனால் அவர் மீண்டும் மருத்துவமனைக்கு சென்றார்.

இதனிடையே ஜாக்கிற்கு ஏற்கனவே நுரையீரல் பிரச்சினை இருந்ததால், அது தொடர்பாக ஏதவாது பிரச்னை இருக்கலாம் என மருத்துவர்கள் எண்ணினார்கள். ஆனால் அவருக்கு வலி மட்டும் குறையவில்லை. இதையடுத்து ஜாக்கின் தொண்டை பகுதியை மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது அங்கு ஒருவிதமான அரைவட்ட வடிவில் ஏதோ ஒரு பொருள் இருப்பது தெரியவந்தது. இது மருத்துவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து ஜாக்கிடம் கேட்டபோது தான் மருத்துவர்களுக்கு விஷயம் புரிந்தது. கடந்த சில வருடங்களாக பல் செட் பயன்படுத்தி வந்த ஜாக், வயிற்றில் அறுசை சிகிச்சை செய்யப்பட்ட சமயத்தில் இருந்து அதை காணவில்லை என்று மருத்துவர்களிடம் கூறியுள்ளார். அப்போது தான் ஜாக்கின் தொண்டை வலிக்கு அவரது பல் செட் காரணம் என்பது புரிந்தது. இதையடுத்து தொண்டையில் சிக்சியிருந்த பல் செட்டை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் அகற்றினர்.

இருப்பினும் முதியவருக்கு முழுமையாக குணமாகாத நிலையில், தற்போதும் அவர் தொண்டையில் ஏற்பட்ட பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விவகாரத்தில் யார் மீது தவறு என்பது இன்னும் அறியப்படாத நிலையில், தான் பல் செட் பயன்படுத்தி வந்ததை முதியவர் ஜாக் மருத்துவர்களிடம் முன்கூட்டியே தெரிவிக்காதது தான் பிரச்சினைக்கு காரணம் என கூறப்பட்டுள்ளது.

HOSPITAL, FALSE TEETH, SURGERY, JAMES PAGET HOSPITAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்