வாட்ஸ்அப் செயலியிலிருந்த குறையைக் கண்டுபிடித்ததற்காக 19 வயது கேரள மாணவரைக் கௌரவப்படுத்தியுள்ளது ஃபேஸ்புக்.
வாட்ஸ்அப் செயலி உள்ளிட்ட தங்களது செயலிகளில் உள்ள பக் எனும் பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு ஃபேஸ்புக் ஊக்கத்தொகை அளித்து பெருமைப்படுத்தி வருகிறது. இந்நிலையில் வாட்ஸ்அப் செயலியில் இருந்த ஒரு குறைபாட்டை கேரளாவைச் சேர்ந்த கே.எஸ்.அனந்தகிருஷ்ணா என்ற பொறியியல் மாணவர் கண்டுபிடித்துள்ளார். வாட்ஸ்அப் செயலியை உபயோகிக்கும் ஒருவரது கணக்கில் பதியப்பட்டிருக்கும் ஃபைல்களை மற்றவர்கள் முழுவதுமாக அழிக்க வழிசெய்யும் வகையில் அந்தக் குறைபாடு இருந்துள்ளது.
இதுபற்றி ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு தகவல் கொடுத்த அவர் அந்தக் குறைபாட்டை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த 2 மாதங்களாக ஆய்வு செய்து அந்தக் குறைபாட்டை நீக்கிய ஃபேஸ்புக், அதைக் கண்டுபிடித்த அனந்தகிருஷ்ணாவுக்கு 500 அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 34,000) ஊக்கத்தொகையாக அளித்ததுடன் ஃபேஸ்புக்கின் வால் ஆஃப் ஃபேம் பட்டியலிலும் அவர் பெயரை இணைத்துள்ளது. அந்நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளவர்கள் பட்டியலில் அனந்தகிருஷ்ணாவின் பெயர் 80வது இடத்தில் இடம்பெற்றுள்ளது.
கேரளா பத்தினம்திட்டாவில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வரும் அனந்தகிருஷ்ணா அந்த மாநில போலீஸின் ஆய்வுப் பிரிவான கேரளா போலீஸ் சைபர்ட்ரோம் பிரிவில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஸ்கூல் வேனின் சக்கரத்தில் சிக்கி 1ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு..! தாய் கண்முன்னே நடந்த சோகம்..!
- ‘அவனுக்கு நீச்சல் தெரியும் அப்றம் எப்டி இது நடந்தது’.. 6 மணி நேரம் பப்ஜி விளையாடிய மகனுக்கு நேர்ந்த கொடுமை.. பெற்றோர் கதறல்!
- ‘இது என்ன புதுசால்ல இருக்கு..!' 'இப்படி எல்லாம் கூடவா வேல கேப்பாங்க..?’
- 'சாலையோரம் கட்டப்பையில் கிடந்த பச்சிளங்குழந்தை'... 'பிறந்து 7 நாளே ஆன நிலையில் நடந்த பரிதாபம்'!
- 'ஃபேஸ்புக் லைவ் பண்ணனுமா'... 'அப்ப நீங்க இத எல்லாம் கடைப்பிடிக்கணும்!
- 'சார் நான் இத படிக்கணும்னு சொன்னேன்'... 'ஆனா அவரு இதத்தான் படிக்கணும்னு சொல்ராரு'... 'தந்தைமீது போலீசிடம் புகாரளித்த மகள்'!
- ’பேஸ்புக்கை பிரேக்-அப் பண்ண நேரம் வந்துடுச்சு’.. இவரே இப்படி சொல்றாரா? அதிர்ச்சிப் பின்னணி!
- 3-வது மாடியில் நின்றபடி 'செல்போன்' பேசிய பள்ளி மாணவி.. 'அஜாக்கிரதை'யால் நிகழ்ந்த சோகம்!
- 'அவன போக சொல்லுயா..'.. ‘நான் மாற்றுத்திறனாளி சார்’.. ‘அதுக்கு?’.. கிரிக்கெட் ரசிகரின் வருத்தமான போஸ்ட்!
- 'இங்கையுமா'?...'மணமேடையில வச்சு இப்படி செஞ்சிட்டீங்களே 'மாப்பிள்ள'...வைரலாகும் வீடியோ!