'அசாதாரணமான வரலாற்று சோதனையை கடந்துட்டோம்!'.. 'நம்ம நடவடிக்கைதான் பல்லாயிரக்கணக்கான உலக உயிர்களை காப்பாத்தியிருக்கு!'.. சீன அதிபர் புளங்காகிதம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனாவுக்கு எதிரான மக்கள் போரின் ஹீரோக்களை கௌரவிக்கும் விதமாக சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி விழா ஒன்றை நடத்தியுள்ளது.

அந்த விழாவில் கலந்துகொண்ட சீன அதிபர் ஜி ஜின்பிங் மருத்துவ நிபுணர்களுக்கு பதக்கங்களை வழங்கியதுடன், சீன நாடு, கொரோனா எனும் ஒரு வரலாற்றுச் சோதனையை வெற்றிகரமாக கடந்துவிட்டதாக புளங்காகிதப்பட்டு பேசினார்.
உலகெங்கிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரை, சீனாவில் கொரோனா வைரஸ் நோய் தாக்கத் தொடங்கியது முதலே வெளிப்படையாக செயல்பட்டது உள்ளிட்ட நடவடிக்கைகள் காப்பாற்ற உதவியதாகவும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக சீனாவின் வுஹானில் தான் கொரோனா வைரஸ் உற்பத்தி செய்யப்பட்டதாகவும், சீனாவின் தொடக்க கால தோல்விகள்தான் கொரோனா வைரஸ் விரைவாக உலகம் முழுவதும் பரவுவதற்குக் காரணமாக இருந்ததாகவும் டிரம்ப் விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்