'வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்ல'... 'ட்விட்டரில் தெறிக்கவிட்ட கமலா ஹாரிஸ்'... பரிதவிப்பில் டிரம்ப்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கமலா ஹாரிஸ் ட்விட்டரில் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலை உலகமே உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது. உலகின் மிகவும் சக்திவாய்ந்த பதவியாகக் கருதப்படும் அமெரிக்க அதிபர் பதவியை யார் பிடிப்பார்கள் என்பது குறித்து உலக தலைவர்கள் மட்டுமல்லாது பல நாட்டு மக்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் முன்னணியில் இருக்கிறார். இதனால் பதவியில் இருக்கும் அதிபர் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றிபெற்று அதிபர் நாற்காலியைப் பிடிக்கும் பல வருடப் பழக்கம் மாறுமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

இந்த சூழ்நிலையில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த கோரி டிரம்ப் தரப்பில் வழக்குப் போடப்பட்டுள்ளது. மேலும் தனது மேற்பார்வையில் வாக்கு எண்ணிக்கையை நடத்த டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்டவரும் அமெரிக்காவின் துணை அதிபர் பதவிக்கு ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுபவருமான கமலா ஹாரிஸ், ட்விட்டரில் அதிரடியான கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், ''நானும் ஜோ பைடனும் தெளிவாக இருக்கிறோம். ஒவ்வொரு வாக்குகளும் எண்ணப்பட வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.

அதே போன்று ஜோ பைடன், ''அதிகாரத்தை நாம் வற்புறுத்தி எடுக்க முடியாது. அது மக்களிடம் இருந்து தான் வர வேண்டும். மக்கள் தான் யார் அதிபர் என்பதைத் தீர்மானிப்பார்கள். நாங்கள் வெற்றி பெற்று விட்டோம் எனக் கூறவில்லை. ஆனால் மொத்த வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் நாம் தான் வெற்றி பெறுவோம்'' எனத் தெரிவித்துள்ளார். ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை எனக் குறிப்பிட்டுள்ள சர்வதேச அரசியல் வல்லுநர்கள், இது நிச்சயம் டிரம்ப்பை பீதியில் ஆழ்த்தும் எனக் கூறியுள்ளார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்