'எவர்கிரீன்' கப்பலுக்குள்ள இருக்குற எல்லாருமே... 'தற்போது தெரிய வந்துள்ள அதிர்ச்சி தகவல்...' - மூணு நாளா கடல்ல பயங்கர டிராபிக் ஜாம்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஜப்பானின் ஷொய் கிஷன் காய்சா நிறுவனத்தின் எவர்கிவன் கப்பலை தைவான் நாட்டின் எவர்கிரீன் மரைன் கார்ப்பரேசன் நிறுவனம் குத்தகைக்கு எடுத்துள்ளது.

'எவர்கிரீன்' கப்பலுக்குள்ள இருக்குற எல்லாருமே... 'தற்போது தெரிய வந்துள்ள அதிர்ச்சி தகவல்...' - மூணு நாளா கடல்ல பயங்கர டிராபிக் ஜாம்...!

கடந்த 2018 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்த எவர்கிவன் கப்பல் 400 மீட்டர் நீளமும் 59 மீட்டர் அகலமும் கொண்டது. எம்பயர் ஸ்டேட் கட்டத்தை விட நீளமானது. உலகின் மிகப் பெரிய சரக்குக்கப்பல்களில் இதுவும் ஒன்று. ஒரே சமயத்தில் 20,000 கண்டெய்னர்களை ஏற்றி செல்லும் திறன் படைத்தது.மணிக்கு 22.8 நாட் வேகத்தில் செல்லக் கூடியது.

                                   Evergreen shipwreck in the Suez Canal captain All Indians

இந்த எவர்கிவன் கப்பல் சீனாவிலிருந்து நெதர்லாந்தின் ராட்டர்டாம் நகரம் நோக்கி சென்று கொண்டிருந்த போது, கடந்த 23 - ஆம் தேதி கடுமையான புழுதி புயல் காரணமாக சூயஸ் கால்வாயில் விபத்துக்குள்ளானது.

                                         

சூயஸ் கால்வாயின் குறுக்காக மாட்டிக்கொண்ட இந்த கப்பல் மீண்டு வர இயலாமல் ஒரு வார காலமாக அங்கேயே நிற்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த கப்பலை இயக்கிய கேப்டன் உள்ளிட்ட 25 பேரும் இந்தியர்கள்தான். இவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

                           

கால்வாயில் குறுக்கு நெடுக்காக மாட்டியுள்ள இந்த கப்பலால் கடல் வழிபாதையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பாதையில் பயணிக்க இருந்த 206 கப்பல்கள் டிராபிக்கில் மாட்டிக் கொண்டு நிற்கின்றன.

சூயஸ் கால்வாயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், கப்பல்கள் ஆப்ரிக்காவின் நன்னம்பிக்கை முனையை சுற்றி ஐரோப்பாவுக்கு செல்ல வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதனால், கூடுதலாக 2 வாரங்கள் பயணகாலம் ஆகும் எனவும் சொல்லப்படுகிறது.

                                     

முதல்கட்ட விசாரணையில், கப்பலில் தொழில்நுட்ப கோளாறுகளோ, இன்ஜீன் கோளாறுகளோ விபத்துக்கு காரணம் இல்லை என கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்து ஷொய் கிஷன் காய்சா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்த விபத்தால் பாதிக்கப்பட்ட அத்தனை நிறுவனங்களுக்கும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.

தற்போது ஏற்பட்டுள்ள விபத்துகளில் சிக்கும் கப்பல்களை மீட்பத்தில் திறைமையான நெதர்லாந்து நாட்டின் போகாலிஸ் நிறுவனத்தை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் விரைவில் சூயஸ் கால்வாய்க்கு வந்துள்ளனர். இதனால், கப்பலை மீட்கும் பணி துரிதமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுநாள் வரையில் கப்பலில் எண்ணெய்கசிவு ஏற்படவில்லை என்பது ஆறுதலிக்க கூடிய செய்தி' என கூறியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்