'உலகம் முழுவதும் கொரோனா பீதியில்...' 'எல்லைப்' பிரச்னையை கையிலெடுக்கும் 'சீனா'... ஏதோ 'திட்டத்துடன்' செயல்படுவதாக 'ஆய்வாளர்கள் கருத்து...'
முகப்பு > செய்திகள் > உலகம்எவரெஸ்ட் மீண்டும் தங்களது எல்லைக்குள் இருக்கிறது என்பது போன்ற மாயை உருவாக்கி, சீனா ட்வீட் ஒன்று பதிவு செய்து இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை சைனா குளோபல் டெலிவிஷன் நெட்வொர்க் ட்வீட் ஒன்றை பதிவிட்டு இருந்தது. அந்தப் பதிவில், ''சூரியனின் ஒளிவட்டம் குமொலங்மாவில் தெரிகிறது'' என்று பதிவிட்டு இருந்தது. குமொலங்மா என்று சீனா குறிப்பிடுவது எவரெஸ்ட்டைத்தான். எவரெஸ்ட்டின் பெரும்பகுதி சீனா ஆக்கிரமித்து வைத்து இருக்கும் திபெத்தில்தான் இருக்கிறது.
1960ஆம் ஆண்டில் சீனாவுக்கும், நேபாளத்திற்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, எவரெஸ்ட் இரண்டாக பிரிக்கப்பட்டது. தெற்குப் பகுதி நேபாளத்துக்கும், வடக்குப் பகுதி திபெத்துக்கும் ஒதுக்கப்படும் என்று கையெழுத்தானது. திபெத் தற்போது சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் இருப்பதால் எவரெஸ்ட்டை சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால் சீனாவின் ஆதிக்கத்திலிருந்து விடுபட திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமா தொடர்ந்து போராடி வருகிறார்.
திபெத்தின் பக்கம் இருக்கும் எவரெஸ்ட் பகுதியை சீனர்கள் மிகவும் குறைவாக பயன்படுத்தி வருகின்றனர். அங்கு வருபவர்களுக்கு விசா கொடுப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.
இதனிடையே எவரெஸ்ட்டில் 5G நெட்வொர்க்கை சீனா அமைத்து வருகிறது. இதன் மூலம் இந்தியா, வங்கதேசம், மியான்மர் போன்ற நாடுகளின் ராணுவ தளங்களை சீனா கண்காணிக்கும் சூழல் ஏற்படும். தற்போது இருக்கும் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி, சீனாவும் ஏதோ திட்டத்தை கருத்தில் கொண்டே செயல்படுகிறது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "இதுக்கெல்லாம் சீனாகிட்ட போகணுமா?".. "ஒரே மாசத்துல கண்டுபுடுச்சுட்டோம்!".. இந்திய மருத்துவர்கள் சாதனை!
- 'இன்னும்' முடியல... 'அதிரடி' நடவடிக்கைகளால் கொரோனாவை 'வென்றும்'... மக்களை 'அதிர்ச்சியில்' ஆழ்த்தியுள்ள 'எச்சரிக்கை'...
- “கொரோனாவை எங்களால கட்டுப்படுத்த முடியாம போனதுக்கு இதான் காரணம்!” - ஒருவழியாக உண்மையை உடைத்த மூத்த சீன அதிகாரி!
- இந்திய-சீன எல்லையில் பரபரப்பு!.. இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே திடீர் மோதல்!.. என்ன நடந்தது?
- "அந்த செயலி பாதுகாப்பனதல்ல!".. 'வார்னிங்' கொடுத்தும் கேட்காமல் 'முதல் இரண்டு' இடங்களைப் பிடித்த 'இந்தியா & அமெரிக்கா'!
- '25 கோடி' ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த 'உயிரினம்...' 'படிமங்களைக்' கண்டு 'வியந்து போன' ஆய்வாளர்கள்...
- 'ஜூலை மாதம் இறுதியில் உச்சத்தை எட்டும்...' 'மக்கள் நெருக்கம்' அதிகம் என்பதால் 'கட்டுப்படுத்துவது கடினம்...' 'இந்தியா குறித்து WHO அதிர்ச்சித் தகவல்...'
- 'அந்த' நிலை இங்கு வராது... தொடர்ந்து 'உயரும்' பாதிப்புக்கு இடையே... 'ஆறுதல்' தரும் தகவல்களுடன் சுகாதாரத்துறை மந்திரி 'நம்பிக்கை'...
- "சீனாதான் வைரசை பரப்பியது..." 'இது போன வாரம்...' இந்த வாரம் வேற... 'ட்ரம்பின் கருத்தால்' குழம்பிப் போயிருப்பது 'அமெரிக்கர்கள் மட்டுமல்ல...'
- 'விந்து வழியாக பரவும் கொரோனா...' 'ஷாக் ஆன ஆண்கள்...' இம்யூன் சிஸ்டம் வேலை செய்யாது...' அதிர்ச்சி தரும் சீனா விஞ்ஞானிகள்...!