'காச வச்சிட்டு தாராளமா நடையை கட்டுங்க'... 'கறாராக நிற்கும் எகிப்து'... ஆட்டம் காண வைத்துள்ள தொகை!
முகப்பு > செய்திகள் > உலகம்தங்களுக்கு இழப்பீடு கிடைக்கும் வரையிலும் கப்பலை ஒரு இன்ச் கூட நகர விட மாட்டோம் என எகிப்து தெரிவித்துள்ளது.
எகிப்து நாட்டின் சூயஸ் கால்வாயில் அண்மையில் எவர் கிவன் என்ற சரக்கு கப்பல் தரைதட்டி நின்ற சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தரைதட்டி நின்றதால் கப்பல் போக்குவரத்து கிட்டத்தட்ட ஐந்து நாட்களுக்கு மேல் அந்த நீர்வழி பாதையில் முடங்கிப் போனது. சூயஸ் கால்வாய் ஆணையம் கப்பலை மீட்கும் முயற்சிகளை இரவு பகல் பார்க்காமல் மேற்கொண்டது.
இறுதியில் கப்பலை மீட்டு மீண்டும் மிதக்கச் செய்தது. இருப்பினும் இழப்பீடு வேண்டும் என சூயஸ் கால்வாய் ஆணையம் கேட்டு வந்தது. கப்பலை மீட்கும் பணியில் இரவு பகலாக ஈடுபட்ட ஊழியர்களுக்கான சம்பளம், பயன்படுத்தப்பட்ட கருவிகளுக்கான செலவுகள், கால்வாயில் ஏற்பட்டுள்ள சேதம், மணலை அப்புறப்படுத்துவதற்கான செலவுகள், இழுவை படகுகளுக்கான செலவுகள், வணிக ரீதியிலான நஷ்டம் என அனைத்தும் சேர்த்து மொத்தமாக பில் போட்டுள்ளது சூயஸ் நிர்வாகம்.
அதன்படி உத்தேசமாக ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடாக வேண்டும் என எகிப்து கேட்டுள்ளது. இதனை சூயஸ் கால்வாய் ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி ஒசாமா ரபீ உறுதி செய்துள்ளார். இந்நிலையில் தான் கால்வாய் ஆணையம் இதனைத் தெரிவித்துள்ளது. கப்பல் எப்படி தரை தட்டியது என்ற விசாரணை முடியும் வரையிலும், தங்களுக்கு இழப்பீடு கிடைக்கும் வரையிலும் கப்பலை ஒரு இன்ச் கூட நகர விட மாட்டோம் என எகிப்து தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'உண்மை என்னன்னு தெரியாம...' 'இப்படி நாக்குல பல்லு போட்டு பேசாதீங்க...' 'எவர்கிரீன் கப்பல் சிக்கியது குறித்து வைரலான தகவல்...' - பதிலடி கொடுத்த பெண்மணி...!
- 'ஒரு இஞ்ச் நகர முடியாது'... 'மொத்தமா செட்டில் பண்ணிட்டு நடையை கட்டுங்க'... 'சூயஸ் கால்வாய் கேட்ட இழப்பீடு'... பல்ஸை எகிறவைக்கும் தொகை!
- 'எவ்வளவு போராட்டம்...' 'உலகத்தையே திரும்பி பார்க்க வச்ச கப்பல்...' வெளியான 'பரபரப்பு' தகவல்...! - ஓனர்ஸ் எல்லாரும் பயங்கர மகிழ்ச்சி...!
- 'திருப்பூரையும் விட்டுவைக்காத 'எவர்கிரீன்' கப்பல்'... 'சூயஸ் கால்வாய்க்கும் திருப்பூருக்கும் என்ன தொடர்பு'?... பின்னணி தகவல்கள்!
- 'எவர்கிரீன்' கப்பலுக்குள்ள இருக்குற எல்லாருமே... 'தற்போது தெரிய வந்துள்ள அதிர்ச்சி தகவல்...' - மூணு நாளா கடல்ல பயங்கர டிராபிக் ஜாம்...!