'Corona' நெகடிவ் என்பதற்கு ஆவணம் இருந்தும் 2 நாட்கள் கணவரைப் பிரிந்து தனிமை முகாமில் அடைக்கப்பட்ட பெண்!.. ‘காரணம் இப்படி ஒரு விஷயத்தை கோட்டை விட்டது தான்!’

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்கா சென்று கனடா திரும்பிய  பெண் ஒருவரிடம் அவருக்கு கொரோனா இல்லை என்பதற்கான ஆவணங்கள் இருந்தும் அவரை அதிகாரிகள் தனி அறையில் அடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் நாம் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய காரணமும் இருக்கிறது. அதற்கு அந்த பெண்ணுக்கு முழுமையாக என்ன நடந்தது என அறிய வேண்டும்.

ஆம், Nikki Mathis எனும் 35 வயதான பெண், வேலை விஷயமாக அமெரிக்கா சென்று திரும்பினார். விமான நிலையம் வந்து இறங்கிய இவரிடம், அவருக்கு கொரோனா இல்லை என்பது தொடர்பான மருத்துவ ஆவணங்களை அதிகாரிகள் கேட்டுள்ளனர். அப்போது அவர் சமர்ப்பித்த ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்த்துவிட்டு அதன் பிறகும் அவரை சுற்றிவளைத்து வெள்ளை நிற வாகனம் ஒன்றில் அழைத்துச் சென்றனர்.

மேலும் தங்களுடன் வர மறுத்தால் கைது செய்வோம் என்றும் அவர்கள் எச்சரித்தனர். இதனால் தனது கணவரான Chris என்பவருக்கு மொபைலில் தகவல் அளிக்க இதனை தொடர்ந்து அந்த அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு தம் மனைவிக்கு என்ன ஆயிற்று, அவர் எங்கே அழைத்துச் செல்லப்படுகிறார் என்று Chris விசாரித்துள்ளார். ஆனால் அப்போதும் எதுவும் கூற முடியாது என்று மறுத்து விட்ட அதிகாரிகள், Nikki Mathis-ஐ ஹோட்டலில் உள்ள undisclosed isolation center-க்கு அழைத்துச் சென்றனர்.  அங்கு தன்னை போலவே பலருடன் அடைத்து வைக்கப்பட்டதாக Nikki Mathis குறிப்பிட்டுள்ளார்.

ஒருபுறம் தம் குடும்பத்தினருக்கு என்ன ஆயிற்று என Nikki Mathis பதறிப்போக, இன்னொருபுறம் Chris தம் மனைவி பாதுகாப்பாக இருக்கிறாரா என்கிற பதற்றத்துடன் இருக்க, இப்படியே இரண்டு நாட்கள் தவித்துள்ளனர். பின்னர் Nikki Mathis விடுவிக்கப்பட்டார். ஆனால் என்ன நடந்தது என்று விசாரித்த போதுதான் சில உண்மைகள் வெளிவந்தன. வெளிநாடுகளுக்கு இப்படி சென்று திரும்புபவர்கள் தமக்கு கொரோனா இல்லை என்கிற ஆவணத்தைத் வைத்திருக்க வேண்டும் என்பது ஒருபுறம் உண்மைதான்.

அதே சமயம் கொரோனா பரிசோதனை செய்து தனக்கு கொரோனா இல்லை என்பதை காட்டுவதற்காக ஆவணத்தை வைத்திருப்பது மட்டும் போதாது. பிசிஆர் பரிசோதனையும் அவர்கள் கட்டாயம் செய்திருக்க வேண்டும். ஆம்,  Nikki Mathis செய்தது பிசிஆர் அல்ல என்பதுதான் இங்கு சிக்கல். இது சற்றே அதிர்ச்சி தரக்கூடிய செய்தியாகத்தான் இருக்கும். ஆனால் இது அதிர்ச்சி தரக்கூடிய செய்தி அல்ல. எச்சரிக்கை தரக்கூடிய செய்தி.  இப்படி வெளிநாட்டுக்கு சென்று வரும் ஒருவரிடம் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் இருந்தால் போதாது. மேலும் அது பிசிஆர் முறையில் செய்யப்பட்டிருக்க வேண்டும். அதற்கான ஆவணத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என்பது தான் இங்கிருக்கும் அறியப்பட வேண்டிய விதி.

ALSO READ: “ஆபீஸ் ஜூம் மீட்டிங்ல ஆடு பங்குபெறுதா?”.. 'மொத்த வாழ்வையும் முடக்கிய லாக்டவுன்!'.. ‘நம்பவே முடியாத’ ஐடியாவை வைத்து.. அடி ‘தூள்’ பண்ணிய பெண்!

பயணம் தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளும் பிசிஆர் முறையில் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளதை, அதாவது கொரோனா ஆண்டிஜன் இருக்கிறதா என்பதைக் காட்டும் சோதனையான இந்த பிசிஆர் சோதனையும் அதன் முடிவு தொடர்பான ஆவணமும் கையில் இருப்பது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்