யாரெல்லாம் 'அந்த வாக்சின்' போட்டீங்களோ... அவங்களுக்கு 'கிரீன் பாஸ்' தர முடியாதுங்க...! - அனுமதி வழங்க மறுத்த ஐரோப்பிய ஒன்றியம்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு- அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனத்துடன் இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் ஒப்பந்தம் செய்து இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் மிகப்பெரிய அளவில் கோவிஷீல்டு தடுப்பூசி மக்களுக்கு போடப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டுமே ஒரே வழி என வல்லுநர்கள் தெரிவிக்க, உலகின் பணக்கார மற்றும் நடுத்தர நாடுகள் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

பெரும்பாலான நாடுகள் இரண்டு தடுப்பூசி டோஸ்கள் செலுத்திக் கொண்டால் தங்களது நாட்டிற்குள் வரலாம் எனத் தெரிவித்துள்ளன. தற்போது உலகளவில் பைசர், மாடர்னா, ஜான்சன் அண்டு ஜான்சன், கோவிஷீல்டு (இங்கிலாந்தில் அதற்கு வேக்ஸேவ்ரியா), கோவேக்சின், ஸ்புட்னிக்-வி, சீனாவின் இரண்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தில் ஏராளமான நாடுகள் உள்ளன. இந்த நாடுகளில் உள்ள மக்கள் எளிதாக பயணம் மேற்கொள்ள கிரீன் பாஸ் என்ற நடைமுறையை செயல்படுத்த இருக்கிறது. கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் அதற்கான கிரீன் பாஸ் சான்றிதழ் உடன் ஸ்பெயினில் இருந்து பிரான்ஸ், பிரான்ஸில் இருந்து இத்தாலி என பயணம் செய்யலாம்.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஐரோப்பிய மருந்துகள் அமைப்பு இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தால் தயாரிக்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு கிரீன் பாஸ் அங்கீகாரம் வழங்கவில்லை.

இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் வேக்ஸேவ்ரியா, அமெரிக்காவின் பைசர், மாடர்னா, ஜான்சன் அண்டு ஜான்சன் ஆகிய நான்கு தடுப்பூசிகளுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதனால் சீரம் இன்ஸ்டிடியூட் இந்தியா தயாரித்த தடுப்பூசிகளை போட்டுக்கொண்ட ஐரோப்பிய யூனியன் நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் நாட்டில் இருந்து ஐரோப்பிய யூனியனில் உள்ள மற்ற நாடுகளுக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்