மெல்ல 'விலகும்' கொரோனாவின் பிடி... '17 நாட்களுக்கு' பிறகு... முதல்முறையாக 'குறைந்த' பலி எண்ணிக்கையால்... துளிர்த்துள்ள 'நம்பிக்கை'...
முகப்பு > செய்திகள் > உலகம்இத்தாலியில் 17 நாட்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று இத்தாலி ஆகும். அங்கு இதுவரை 1.29 லட்சம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 15,887 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இத்தாலியில் கடந்த சனிக்கிழமை முதல் உயிரிழப்புகள் 23 சதவீதம் குறைந்துள்ளது.
கடந்த மார்ச் 19ஆம் தேதிக்குப் பிறகு நேற்று முதல்முறையாக கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அங்கு நேற்று 525 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கடந்த மார்ச் 19ஆம் தேதி கொரோனாவால் 427 பேர் உயிரிழந்த நிலையில், அதன் பிறகு அதிகரித்துக்கொண்டே சென்ற உயிரிழப்பு தற்போது குறைந்துள்ளது.
மேலும் அங்கு மருத்துவமனைகளில் புதிதாக கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் வருவதும் நேற்று முதல்முறையாக குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு ஆகியவை குறைந்து வருவதாலும், குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் அந்த நாட்டு மக்களிடம் நம்பிக்கை துளிர்விடத் தொடங்கியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஊரடங்கின்போது' வீட்டு வாசலில் நின்ற '5 பேருக்கு'... இளைஞரால் நேர்ந்த 'கொடூரம்'... வெளிவந்த 'உறையவைக்கும்' காரணம்...
- 'போகாத, போகாதன்னு சொன்னனே'... 'மனைவி கிடந்த கோலம்'... ஒரு செகண்ட்டில் நடந்த விபரீதம்!
- 'பியர்ல் ஹார்பர் தாக்குதல்... இரட்டை கோபுரம் தகர்ப்பு போல.... மிக மோசமான துயரை அமெரிக்கா சந்திக்கும்!'... அமெரிக்க அரசு மருத்துவர் பரபரப்பு கருத்து!
- ‘ஊரடங்கு உத்தரவால் சாப்பாட்டுக்கே வழியில்லாம கஷ்டபடுறாங்க’!.. ‘ட்விட்டரில் உடனடி ரெஸ்பான்ஸ்’.. அசத்தும் முதல்வர்..!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- ‘எங்களுக்கெல்லாம் ஃபயரே ஸ்ப்ரே மாதிரி!’.. ‘நெருப்பை வைத்து சாகசம் செய்தபோது விபரீதம்!’.. தீயாய் பரவும் வீடியோ!
- பள்ளி, கல்லூரிகள் 'மீண்டும்' திறப்பது குறித்து... 'இந்த' தேதியில் முடிவு செய்யப்படும்: மத்திய அமைச்சர்
- 'தீபம்' ஏத்துனா கொரோனா செத்துருமா?... பிரதமரை அவதூறாக பேசி... 'வீடியோ' வெளியிட்ட இளைஞர்கள் கைது!
- நிறைந்த கல்லறைகள்... 'புதைக்க' இடம் இல்லாமல்... 'சடலங்களை' ரோட்டில் வைக்கும் அவலம்!
- ‘சென்னை முதலிடம்.. கோவை 2வது இடம்!’.. வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட 90,824 பேர்! ஏப்ரல் 5-ஆம் தேதிவரையிலான முழு விபரங்கள் உள்ளே!