"குரங்கு அம்மை நோய்க்கு இந்த மருந்தை Use பண்ணலாமா?".. ஐரோப்பிய யூனியன் சொன்னது என்ன?.. முழு விபரம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

குரங்கு அம்மை நோய்க்கு பெரியம்மைக்கான தடுப்பூசியான Imanvex என்னும் தடுப்பூசியை உபயோகிக்க ஐரோப்பிய யூனியன் அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

குரங்கு அம்மை

வைரஸ் தாக்குதலால் ஏற்படும் அரியவகை நோய் தான் இந்த குரங்கு அம்மை. இதில் மொத்தம் இரண்டு வகை மரபணுக்களை கொண்ட வைரஸ்கள் இருக்கின்றன. முதலாவது பிரிவைச் சேர்ந்த வைரஸ், மத்திய ஆப்பிரிக்க நாடுகளிலும் இரண்டாவது வகை மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் கண்டறியப்பட்டது. தற்போது 72 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த நோயினால் 16,000 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார ஆணையம் தெரிவித்திருக்கிறது.

குரங்கு அம்மை பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல்வலி, முதுகுவலி, உடல் நடுக்கம், சோர்வடைதல் ஆகியவை ஏற்படலாம். மேலும், இந்த நோயின் அறிகுறிகள் தோன்றிய 5 நாட்களுக்குள் உடலில் சிகப்பு நிறப் புள்ளிகள் தோன்றும். பின்பு அவை கொப்பளங்களாக மாறும். அடுத்த 2-4 வாரங்களில் இந்தக் கொப்பளங்கள் மறைந்து உதிர்ந்து விடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

அவசரநிலை

இந்நிலையில், குரங்கு அம்மை நோய்ப் பரவல் அதிகரித்து வருவதை முன்னிட்டு உலகளாவிய சுகாதார அவசரநிலையை உலக சுகாதார மையம் சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது. இதனை தொடர்ந்து நெதர்லாந்து நாட்டை சேர்ந்த தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின்  Imanvex என்னும் தடுப்பூசியை குரங்கு அம்மைக்கும் பயன்படுத்தலாம் என ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த Imanvex தடுப்பூசி பெரியம்மை நோய்க்கானதாகும். குரங்கு அம்மை வைரஸ் கிருமிகளுக்கும், பெரியம்மை வைரஸ் கிருமிகளுக்கும் உள்ள ஒற்றுமையின் காரணமாக இந்த மருந்தினை ஐரோப்பிய யூனியன் அங்கீகரித்திருப்பதாக தெரிகிறது.

அங்கீகாரம்

பெரியம்மை நோய் கடந்த 1980 ஆம் ஆண்டே முற்றுலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உலக நாடுகள் பெரியம்மை தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தி வருகின்றன. அந்த வகையில் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த நிறுவனம் கண்டுபிடித்த Imanvex தடுப்பூசிக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு ஐரோப்பிய யூனியன் அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

MONKEYPOX, VACCINE, EU, குரங்குஅம்மை, தடுப்பூசி, ஐரோப்பியயூனியன்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்