38 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்த உலகின் பெரிய எரிமலை.. இனிமே என்ன நடக்கும்?.. எச்சரிக்கை பின்னணி!!
முகப்பு > செய்திகள் > உலகம்ஹவாய் தீவில் உள்ள எரிமலை குறித்து தற்போது வெளியாகி உள்ள செய்தி, உலகளவில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் மேற்கே பசிபிக் பெருங்கடலை ஒட்டி ஹவாய் தீவில் அமைந்துள்ளது மவுனா லோவா என்ற எரிமலை.
இது உலகின் மிகப் பெரிய எரிமலையாகவும் உள்ளது. அப்படி இருக்கையில், கடந்த 1984 ஆம் ஆண்டு இந்த எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அப்படி இருக்கையில், பெரிய அளவிலான நிலநடுக்கங்களை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பாக இரவு நேரத்தில் இந்த எரிமலை வெடிப்பு தொடங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. தற்போது அந்த நெருப்புக் குழம்பு, எரிமலையின் உச்சிப் பகுதியை சூழ்ந்த அளவிலேயே தான் இருந்து வருகிறது. எனவே இதுகுறித்த அச்சுறுத்தல் தற்போது இல்லை என்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதே வேளையில், எரிமலை வெடிப்பு மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்கும் என்றும், நெருப்பு குழம்பின் ஓட்டம் விரைவாக மாறக் கூடும் என்றும் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அப்படி நடக்கும் பட்சத்தில், அங்கிருந்து வெளியேற தயாராக இருக்குமாறும் தீவில் உள்ள 2 லட்சம் மக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
மவுனா லோவா எரிமலை கடந்த சில ஆண்டுகளாகவே வெடிப்பதற்கான அறிகுறிகளை கொண்டிருந்து வந்ததாக தகவல் தெரிவிக்கும் நிலையில், வெடித்து பொங்கும் எரிமலையை சுமார் 72 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் கோனா என்ற நகரத்தில் இருந்து பார்க்க முடிகிறது என்றும் கூறப்படுகிறது.
கடந்த 1843 ஆம் ஆண்டில் இருந்து தற்போத வரை 33 முறை சீற்றம் கண்ட மவுனா லோவா எரிமலையில் கடைசியாக 1984 ஆம் ஆண்டு வெடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அதன் குழம்பு, ஐந்து மைல் அப்பால் இருக்கும் ஹிலோ நகரம் வரை பரவி இருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது. கடந்த 38 ஆண்டுகளில் அப்பகுதியில் இருக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் பட்சத்தில் எரிமலை வெடித்து சிதறினால் பெரிய அளவிலான ஆபத்து ஏற்படலாம் என்றும் கருதப்படுகிறது.
Also Read | "8 வயசுல இப்டி ஒரு உலக சாதனையா?".. வேற லெவலில் கெத்து காட்டிய தமிழ்நாட்டு சிறுவன்!!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஒரே எரிமலை 16,000 ஹிரோஷிமா குண்டுகளுக்கு சமமா..?? உலகையே அச்சுறுத்தும் தம்போரா எரிமலையின் திகில் பின்னணி..!
- "எவ்ளோ ரிஸ்க் தெரியுமா??.." பள்ளத்தில் விழுந்த போன்.. அடுத்த கணமே சுற்றுலா பயணிக்கு காத்திருந்த 'அதிர்ச்சி'
- ஆடு, கோழிகளை எரிமலைக்கு காணிக்கையாக செலுத்தும் பக்தர்கள்.. 600 வருஷமா நடக்கும் வினோத திருவிழா..உறையவைக்கும் புராண கதை..!
- எரிமலையை சுத்தி ஒரே நாள்ல 77 முறை நிலநடுக்கம்.. "ஏதோ வித்தியாசமா நடக்குது..யாரும் கிட்ட போய்டாதீங்க".. எச்சரிக்கும் ஆய்வாளர்கள்..!
- வெடித்த எரிமலை.. வெளியுலக தொடர்பில்லாமல் தவிக்கும் டோங்கோ தீவு.. உதவிக்கரம் நீட்டும் எலான் மஸ்க்
- என்ன விட்டு போய்டாதீங்கடா! சுனாமியில் நாய்களை காப்பாற்ற கடலில் குதித்த பெண்.. கண்கலங்க வைக்கும் நிகழ்வு
- ‘எரிமலை வெடித்ததில் 23 அடி ஆழத்தில் புதைந்து அழிந்துபோன நகரம்!’.. ‘கழுகுப் பார்வையில் வெளிவந்த வீடியோ’!!
- VIDEO: 'வெடித்து சிதறிய எரிமலை'.. கண் இமைக்கும் நேரத்தில் பறந்த மர்ம துகள்.. ஏலியனின் பறக்கும் தட்டா? வைரலாகும் வீடியோ..!
- தேனிலவு பயணத்தில் ‘எரிமலை பள்ளத்துக்குள் விழுந்த கணவன்..’ மனைவி செய்த காரியம்..