"ஒரே ஒரு கண் தான்.. நாய் பாதி கரடி பாதி".. பழங்காலத்தில் வாழ்ந்த வித்தியாசமான விலங்கு.. சாதனை படைத்த ஆராய்ச்சியாளர்கள்.!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் வாழ்ந்த வித்தியாசமான விலங்கு ஒன்றின் படிமங்களை கண்டறிந்துள்ளனர் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்.

"ஒரே ஒரு கண் தான்.. நாய் பாதி கரடி பாதி".. பழங்காலத்தில் வாழ்ந்த வித்தியாசமான விலங்கு.. சாதனை படைத்த ஆராய்ச்சியாளர்கள்.!
Advertising
>
Advertising

Also Read | அந்தரத்தில் நின்ற கேபிள் கார்.. 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உள்ளே சிக்கிய 11 பேரை துணிந்து மீட்ட வீரர்கள்.. வைரல் வீடியோ..!

பூமி தோன்றிய காலத்தில் இருந்து, உயிர்கள் பரிணாமம் பெற்ற வரலாறு குறித்த பல்வேறு ஆராய்ச்சிகள் இன்றும் நடைபெற்று வருகின்றன. இத்தனை ஆண்டுகளில் பூமியில் ஒவ்வொரு காலத்திலும் வாழ்ந்த உயிரினங்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துக்கொன்டே இருக்கின்றன. அந்த வகையில், ஆராய்ச்சியாளர்கள் கரடி நாய் எனப்படும் வித்தியாசமான உயிரினம் இருந்ததற்கான சான்றுகளை கண்டறிந்துள்ளனர்.

ஆராய்ச்சி

சுவிட்சர்லாந்தில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகமான பாசெல்லைச் சேர்ந்த பாஸ்டியன் மென்னெகார்ட் தலைமையிலான நிபுணர்கள் குழு வித்தியாசமான விலங்கு ஒன்றின் தாடையை கண்டுபிடித்துள்ளனர். இது பாடி கரடியும் பாதி நாயின் உடலமைப்பையும் கொண்ட விலங்காக இருக்கலாம் என்று இந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த விலங்குகளின் இனம் 320 கிலோகிராம் (சுமார் 705 பவுண்டுகள்) எடையுள்ளதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இது 36 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் தோன்றி சுமார் 7.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போயிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

தென்மேற்கு பிரான்சின் பைரனீஸ்-அட்லாண்டிக்ஸ் பகுதியிலும் 12.8 முதல் 12 மில்லியன் ஆண்டுகள் பழமையான இதேபோன்ற தாடை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விலங்கினம் டார்டாரோசியோன் என்று அழைக்கப்படுகிறது. இந்த பெயர் டார்டாரோவிலிருந்து வந்ததாகும். இது பாஸ்க் புராணங்களில் ஒற்றை கண் கொண்ட ராட்சச மிருகத்தை குறிப்பதாகும்.

கரடி நாய்கள்

இந்த விலங்கினம் நாய் மற்றும் கரடி ஆகியவற்றின் கலவையாகும். வலிமையான தாடை அமைப்பை கொண்டிருந்த இந்த விலங்கினத்தை கரடி நாய்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். இவை நாய்கள், பூனைகள், கரடிகள் போன்ற மாமிச வகையை சேர்ந்தவை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

கரடியம் நாயும் கலந்த வித்தியாசமான உடலமைப்பை கொண்ட விலங்கினம் இருந்ததற்கான சான்றுகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருப்பது உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read | "நீங்க வாங்குன டிகிரி எல்லாம் வெறும் பேப்பர்".. மெட்ரோ ரயிலில் கீழே உட்கார்ந்து பயணித்த தாய்.. வைரல் கேப்ஷனுடன் ஐஏஎஸ் ஆபிசர் பகிர்ந்த வீடியோ..!

PREDATOR, BEAR DOG, ENORMOUS NEW PREDATOR

மற்ற செய்திகள்