'எனக்கு அங்க யாருமே இல்லங்க!'.. 'இத விட்டா நான் எங்க போவேன்!?'.. அரசின் முடிவால் நொறுங்கிப்போன மூதாட்டி!.. 62 ஆயிரம் பேர் பாசப் போராட்டம்!.. நெகிழ்ச்சி சம்பவம்!
முகப்பு > செய்திகள் > உலகம்உரிய ஆவணங்கள் இல்லாமல் 11 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்துக்கு வந்த சீக்கிய மூதாட்டியை நாடு கடத்த எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் மனு கொடுத்துள்ளனர்.
பஞ்சாபை சேர்ந்த சீக்கிய மூதாட்டி குர்மித் கவுர் சகோதா (வயது 75). கணவரை இழந்த இவர், கடந்த 2009-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு வந்தார். மேற்கு மிட்லண்ட்ஸ் மாகாணம் ஸ்மெத்விக் நகரில் குடியேறினார்.
இந்நிலையில், அவரிடம் எந்த ஆவணங்களும் இல்லை. எனவே, இங்கிலாந்து விசா மற்றும் குடியேற்ற விதிகளின்படி, அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட வேண்டும்.
ஆனால், இந்தியாவில் தனக்கென எந்த குடும்பமும் இல்லை என்றும், இங்கிலாந்திலேயே தொடர்ந்து இருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அரசிடம் குர்மித் கவுர் சகோதா மனு கொடுத்தார். ஆனால் அந்த மனு நிராகரிக்கப்பட்டது.
அவரை நாடு கடத்தும் முயற்சிகள் ஒருபுறம் நடந்து வருகின்றன. சகோதா, ஸ்மெத்விக்கில் உள்ள ஒரு சீக்கிய குருத்வாராவுக்கு வரும் சீக்கியர்களுக்கு உதவிகள் செய்து, அவர்களிடையே நன்மதிப்பை பெற்றுள்ளார். அதனால் அவரை சீக்கிய குடும்பங்கள் தத்தெடுத்துள்ளன.
இந்த நிலையில், சகோதாவை நாடு கடத்தக்கூடாது என்று இங்கிலாந்து உள்துறை அலுவலகத்துக்கும், நாடாளுமன்றத்துக்கும் ஒரு ஆன்லைன் மனு பிரசாரத்தை ஸ்மெத்விக்கில் வசிப்பவர்கள் தொடங்கி உள்ளனர். அதில், 62 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.
அதே சமயத்தில், இங்கிலாந்திலேயே சட்டப்படி தங்கியிருக்க எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்று சகோதாவிடம் விளக்கி இருப்பதாக இங்கிலாந்து உள்துறை அலுவலகம் கூறியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘முதுகெலும்பு இல்லாத ஜெல்லி, சர்வாதிகாரி, எடுப்பார் கைப்பிள்ளை, கோழை’.. ‘வாழ்த்து’ சொன்னது ஒரு குத்தமா? - பிரிட்டன் பிரதமரை ‘காது கருக திட்டிய’ முன்னாள் கேர்ள் ஃபிரண்ட்!
- கொரோனா இறப்பில் ‘புதிய’ உச்சம்.. ஒரு நாள்ல மட்டும் இத்தனை பேரா..! விழி பிதுங்கி நிற்கும் நாடு..!
- மூச்சு விட திணறிய இளவரசர்.. ‘ஏப்ரல் மாதமே உண்டான கொரோனா’.. இத்தனை நாள் ரகசியமா வெச்சிருந்ததுக்கு இதுதான் காரணம்!
- "தடுப்பூசியே சந்தேகம்தான்... அப்படியே பயன்பாட்டுக்கு வந்தாலும்"... 'தடுப்பூசி குழுவின் தலைவர் பகிர்ந்த பகீர் தகவலால் பரபரப்பு!!!...
- “இலங்கை அரசு தோக்கடிச்சிருச்சு.. உலகம் முழுவதும் புலிகள் ஆக்டிவா இருக்காங்க!!” - ‘இங்கிலாந்து அரசை’ வலியுறுத்தி மகிந்த ராஜபக்சே போட்ட ட்வீட்!
- பக்கத்து வீட்டு தாத்தாவுக்காக... 200 நாட்களாக கூடாரத்தில் தூங்கிய சிறுவன்... கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டிய அதிர்ஷ்டம்!.. வியப்பூட்டும் நெகிழ்ச்சி சம்பவம்!
- 'விடுதலைப் புலிகள் மீதான தடை உடைந்தது'!.. இங்கிலாந்து நீதிமன்றம் 'அதிரடி' தீர்ப்பு!.. தடை நீங்கியது எப்படி?.. தீர்ப்பின் பின்னணி என்ன?
- 'எப்படியாவது இந்த கொரோனாவ ஒழிச்சா போதும்'... 'பெரும் Risk-ஐ கையிலெடுக்கும் நாடு!!!'... 'கண்டிப்பாக பலனளிக்குமென ஆய்வாளர்கள் நம்பிக்கை!'...
- ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராஜெனெகாவின் கொரோனா தடுப்பூசிகள் எப்போது ‘பயன்பாட்டுக்கு’ வரும்?.. இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி தகவல்!
- கொரோனா பாதிப்புக்கும், இதுக்கும் என்ன தொடர்பு?.. நோயிலிருந்து குணமானவர்களுக்கு இப்படியும் ஒரு ஆபத்து வர வாய்ப்பிருக்கா?.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!