ஜாலியா விண்ணில் ஒரு ரவுண்ட் வந்த சமோசா...! எதுக்காக பறக்க வச்சார்...? 'வியப்பளிக்கும் ஆச்சரியம்...' வைரலாகும் வீடியோ...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இங்கிலாந்தில் இந்திய உணவகம் நடத்திவரும் ஒருவர் சமோசாவை விண்ணில் செலுத்தி தன் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியுள்ளார்.

இந்தியாவை பூர்விகமாக கொண்ட நிராக் காதெர் என்பவர்  இங்கிலாந்தில் பாத் நகரில் 'சாய் வாலா' என்னும் உணவகத்தை நடத்தி வருகிறார். மேலும் இந்த உணவகம் பிரிட்டனில் மிகவும் புகழ்பெற்ற உணவகங்களின் பட்டியலிலும் உள்ளதாக கூறுகின்றனர்.

இந்நிலையில் அதன் உரிமையாளர் நிராக் காதெர் மூன்று முயற்சிகளுக்குப் பிறகு தன் நீண்ட நாள் முயற்சியில் ஒரு சமோசாவை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருக்கிறார்.

இதுகுறித்து யு.பி.ஐக்கு பேட்டியளித்த நிராக் காதெர், 'நான் ஒருமுறை நகைச்சுவைக்காக சமோசாவை விண்ணில் செலுத்தவேண்டும் என்று கூறிக்கொண்டிருந்தேன். இந்த கொரோனா பொதுமுடக்கத்தில் அனைவருமே சோகத்தில் மூழ்கி கிடப்பதால் அவர்களை சற்று உற்சாகமாக்கலாம் என நினைத்து, என் முயற்சிக்கு காதெர் ஹீலியம் பலூன்களை பயன்படுத்தினேன்.

முதல்முறை என் முயற்சியில் இறங்கியபோது சமோசாவை பலூனுடன் இணைக்கும்முன்பு கடைசி நிமிடத்தில் ஹீலியம் பலூன் கையிலிருந்து நழுவியிருக்கிறது. இரண்டாம் முறை போதிய ஹீலியம் இல்லாததால் அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்திருக்கிறது.

மேலும் தன் விடா முயற்சியால் காதெர் தனது நண்பர்களுடன் சேர்ந்து வெற்றிகரமாக சமோசாவை விண்ணில் செலுத்தி அது வளிமண்டல அடுக்கை தாண்டிச் சென்ற வீடியோவைப் பகிர்ந்திருக்கிறார். சமோசாவை ஒரு பெட்டிக்குள் வைத்து அதனுடன், ஜிபிஎஸ் ட்ராக்கர் மற்றும் ஒரு கோப்ரோ கேமராவையும் இணைத்து அனுப்பியிருக்கிறார்  சமூக வலைதளங்களில் காதெர் இதுகுறித்து பதிவிட்டிருக்கிறார். மேலும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அலெக்ஸ் மாதோன் என்பவர் பிகார்டே பகுதியில் சமோசா இருந்ததை கண்டிபிடித்திருக்கிறார்.

காதெரின் இந்த முயற்சியை சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாகி வருவதுடன், பலரும் இவரை   பாராட்டி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்