என் காதலிய காப்பாத்துங்க.. சைக்கிளோடு மலையில் இருந்து விழுந்த பெண்.. கண்ண மூடிட்டு திறந்து பார்த்தா பெரிய அதிசயமே நடந்துருக்கு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இங்கிலாந்து: சைக்கிளிங் சென்றபோது 80 அடி உயரத்தில் இருந்து இளம்பெண் ஒருவர் விழுந்துள்ளார்.

என் காதலிய காப்பாத்துங்க.. சைக்கிளோடு மலையில் இருந்து விழுந்த பெண்.. கண்ண மூடிட்டு திறந்து பார்த்தா பெரிய அதிசயமே நடந்துருக்கு!
Advertising
>
Advertising

சைக்கிளோடு கீழே விழுந்த பெண்:

இங்கிலாந்தின் ஐக்பர்த் பகுதியை சேர்ந்தவர் காரா சட்டன் (வயது 26). கடந்த ஆகஸ்ட் மாதம், கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்ட இவர், தனது காதலர் ஜேம்ஸ் (வயது 25) என்பவருடன் விடுமுறையை ஜாலியாக கொண்டாட சைக்கிளில் நார்த் வேல்ஸில் இருக்கும் கோட் ஒய் ப்ரெனின் என்ற இடத்தில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளார். அங்கு மலை உச்சியின் ஓரத்தில் நின்று, இயற்கை அழகை ரசிக்கும்போது, எதிர்பாரதவிதமாக அவர் மலை உச்சியில் இருந்து சைக்கிளோடு கீழே விழுந்துள்ளார்.

england girl fell from a height of 80 feet while cycling

காப்பாற்ற முயன்ற காதலன்:

இதன் காரணமாக பதறிய அவரது காதலர், காரா சட்டனைக் காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால், அவரும் கீழே தவறிவிழ இருந்தநிலையில் சுதாரித்துக்கொண்டு, தனது காதலியை காப்பாற்றுமாறு கூக்குரலிட்டார். காரா சட்டன் கீழே விழும்போது, அவருக்கு அருகில் சுமார் 5 மீட்டர் தூரத்தில் மருத்துவ ஊழியர் ஒருவர் நின்றுகொண்டிருந்தார்.

காரா சட்டன் கீழே விழுந்ததும், உடனடியாக அந்த மருத்து ஊழியர் மீட்புக் குழுவினருக்கு தகவல் கூறியுள்ளார். அதிர்ஷ்டவசமாக தலையில் அணிந்திருந்த ஹெல்மெட்டை கழட்டாத காரணத்தால், காரா சட்டன் உயிருடன் விமான ஆம்புலன்ஸ் மூலமாக மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டது.

டாக்குமெண்ட்ரி படம்:

கால் எலும்பு முறிவு, இடுப்பு எலும்பு முறிவு, நுரையீரல் என உடலின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டிருந்தாலும், காரா சட்டன் உயிர் பிழைத்தார். ராயல் ஸ்டோக் பல்கலைக்கழக மருத்துவமனையில் சுமார் 2 மாதங்கள் சிகிச்சைபெற்று வந்தநிலையில், கடந்த இரண்டரை மாதங்களாக வீட்டில் பிஸியோ சிகிச்சை கொடுக்கப்பட்டு, மீண்டும் மெதுவாக நடக்க ஆரம்பித்துள்ளார் காரா சட்டன்.

அதோடு, காரா சட்டன் சிகிச்சைபெற்றுவந்தபோது, அவரின் உடன்பிறந்தவர், நண்பர்கள், உடன் பணிபுரிபர்கள் மற்றும் காதலர் என அனைவரும் உற்சாகப்படுத்திக்கொண்டே வந்ததால், காரா சட்டன் மீண்டும் சற்று எழுந்து நடக்க ஆரம்பித்துள்ளார். காரா சட்டனின் சம்பவங்களை டாக்குமெண்ட்ரி படமாக எடுத்து 999 சேனல் வெளியிடுவதை அடுத்து இந்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.

ENGLAND, GIRL, CYCLING, 80 FEET, சைக்கிளிங், இங்கிலாந்து, 80 அடி உயரம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்