"இதுதான் நீங்க வேலை பாக்குற லாஸ்ட் நாள்"...800 ஊழியர்களை ஒரே வீடியோ காலில் வேலையை விட்டு தூக்கிய கம்பெனி..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இங்கிலாந்தில் இயங்கி வரும் 'P&O Ferries' என்னும் படகு நிறுவனம் தனது 800 பணியாளர்களை ஒரே வீடியோ காலில் வேலையை விட்டு நிறுத்தியுள்ளது. இதனால், தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

Advertising
>
Advertising

"முடிஞ்சா நெருங்கிப் பாருங்க".. 9 மாநில போலீசுக்கு சவால் விட்ட திருடன்.. அவசரப்பட்டுட்டியே குமாரு..!

P&O Ferries நிறுவனம்

1960 காலகட்டத்தில் பயணிகளுக்கான படகு சேவையை தொடங்கியது P&O நிறுவனம். அதன் பிறகு துபாயில் இயங்கிவரும் DP World நிறுவனம் 332 மில்லியன் பவுண்டுகளுக்கு P&O நிறுவனத்தினை வாங்கியது. 103 நாடுகளில் சேவையை வழங்கிவரும் இந்த நிறுவனத்தினை துபாய் சுங்கத் துறையின் தலைவரான சுல்தான் அகமது பின் சுலயேம் வழிநடத்தி வருகிறார்.

வீடியோ மெசேஜ்

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று P&O நிறுவனத்தின் 800 பணியாளர்களுக்கு வீடியோ மெசேஜ் ஒன்றினை அனுப்பி உள்ளது அந்நிறுவனம். அதில், " உங்களை உடனடியாக வேலையில் இருந்து விடுவிக்கிறோம். உங்களுடைய இறுதி வேலை நாள் இன்று" என அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் P&O நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர்.

முன்கூட்டியே அறிவிப்பு கொடுக்காததன் காரணமாக இழப்பீடு வழங்கவும் இருப்பதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். இதனால் அந்நிறுவன ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

போராட்டம்

எந்த வித முன் அறிவிப்பும் இல்லாமல் வேலையை விட்டு நீக்கியதால் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். படகுகளை விட்டு வெளியேற மறுத்துவரும் இந்த ஊழியர்களை தனியார் பாதுகாப்பு அதிகாரிகளை கொண்டு P&O நிறுவனம் வெளியேற்றி வருவதாக தகவல்கள் வெளியாகின.

இந்த தகவலை மறுத்த P&O நிறுவனம், தங்களது பாதுகாப்பு பணியாளர்கள் அமைதியான முறையில் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்திருக்கிறது.

மன்னிப்பு

பணியாளர்களுக்கு அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட தகவல் நேரடியாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், மின்னஞ்சல், தபால், கூரியர், குறுஞ்செய்தி வாயிலாகவும் தொழிலாளர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிலருக்கு தகவலை தெரிவிக்க முடியாமல் போனதாக குறிப்பிட்ட அதிகாரி," இந்த அதிர்ச்சி தரத் தக்க முடிவு பலரையும் பாதித்திருக்கிறது. இதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டார்.

நஷ்டம்

நிறுவனம் கடுமையான நஷ்டத்தினை சந்தித்து வருவதாக தெரிவித்த அதிகாரி,"தற்போதைய நிலையில், P&O ஃபெர்ரிஸ் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. வருடத்திற்கு 100 மில்லியன் பவுண்டுகள் நஷ்டத்தில் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த சூழ்நிலையை தாக்குப் பிடிக்கவே இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டது. எங்களுக்கு வேறு வழி இல்லை" என்றார்.

ஒரே வீடியோ மெசேஜில் 800 பணியாளர்களை இங்கிலாந்து நிறுவனம் பணியில் இருந்து விடுவித்து இருப்பது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடேங்கப்பா..! 400 வருசத்துக்கு அப்புறம் லண்டனுக்கு கொண்டுவரப்பட்ட 2 நீர்நாய்கள்.. இதுக்கு பின்னடி இப்படியொரு காரணம் இருக்கா..?

P&O, P&O FERRIES, WORKERS, P&O FERRIES நிறுவனம், ஊழியர்கள்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்