குவைத் நாட்டில் ஏராளமான பெண்களுக்கு வேலைவாய்ப்பு.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  கூறியுள்ளதாவது: குவைத் நாட்டில் வீட்டு வேலை பணியாளராக  வேலை பார்க்கக 30 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட பெண் பணியாளர்கள் 500 நபர்கள் தேவைப்படுகின்றார்கள்.. குவைத் நாட்டின் ‘Kuwait Gate Foundation’ என்ற நிறுவனத்துடன் தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனமானது கடந்த மாதம் 17-ம் தேதி வீட்டுப்பெண் பணியாளர்களை பணியமர்த்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

Advertising
>
Advertising

இந்த ஒப்பந்தத்தின்படி வீட்டு பெண் பணியாளராக அரபு நாடுகளில் பணியாற்ற ஆர்வமுள்ள பெண்களுக்கு மாத சம்பளமாக ரூ.32 ஆயிரமும், அனுபவம் இல்லாதவர்களுக்கு மாதச்சம்பளமாக ரூ.29,500 வழங்கப்படும்.. இதற்கான வயது வரம்பு 30 முதல் 40 வரை ஆகும்..மருத்துவ பரிசோதனை கட்டணம், விசா, விமான பயணச்சீட்டு, உணவு, இருப்பிடம், மருத்துவம், காப்புறுதி உள்ளிட்ட இதர சலுகைகள் குவைத் நாட்டின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு வேலை அளிப்பவர்களால் வழங்கப்படும்.

ஒப்பந்தங்கள் 2 ஆண்டுகள் வரை நீடிக்கும், ரத்து செய்யாத பட்சத்தில் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்..குவைத் நாட்டின் கலாச்சாரப் பண்புகள் குறித்த கையேடு பணியாளர்களுக்கு தாய் மொழியில் வழங்க வேண்டும், மாத சம்பளம் தவறாமல் வழங்க வேண்டும், பணிபுரியும் இடத்தில் பணியாளர்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை உருவாக்கி கொடுக்க வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

ஆகவே, திருப்பத்தூர் மாவட் டத்தைச் சேர்ந்தவர்கள் பணியில் சேர விரும்பினால் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் இதர விவரங்கள் அறிய, சென்னையில் உள்ள அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தையோ அல்லது திருப்பத்தூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

மேலும், குவைத் நாட்டில் வீட்டு பெண் பணியாளராக பணியாற்ற விரும்புவோர் தங்களது சுய விவரங்களுடன் கூடிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் ஒரு புகைப்படத்துடன் omchousemaid kuwait21@gmail.com என்ற மின் னஞ்சலுக்கு விண்ணப்பிக்கலாம்.

மேற்கண்ட வேலைக்கான விவரங்களை இந்நிறுவனத்தின் வலைதளமான www.omcman power.com மூலமாகவோ அல்லது 044-22505886/044-22500417 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துக்கொள்ளலாம்.

புரிந்துணர்வு ஒப்பந்தமானது 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் 17-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்பதால் பணியில் சேர விரும்புவோர் இக்காலக் கடத்துக்குள் பதிவு செய்து கொள் ளலாம்..முதலில் பதிவு செய்யும் நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தால் வழங்கப் பட்ட அயல்நாட்டு வாய்ப்பு நிறுவனத்தின் முகவர் எண்:RC.No B-0821/CHENNAI/CORPN/1000 5/308/84 ஆகும்’’ இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

KUWAIT, KUWAIT JOBS, JOB NEWS, குவைத், குவைத் வேலைவாய்ப்பு, வேலைவாய்ப்பு, அரபு நாட்டில் வேலைவாய்ப்பு

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்