3 மாசம் பாக்கி... பாகிஸ்தான் பிரதமரிடம் ட்விட்டரில் சம்பளம் கேட்ட பாகிஸ்தான் தூதரகம்

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் சம்பளம் பாக்கி கேட்டி தூதரக பணியாளர்கள் ட்வீட் செய்ய அது தற்போது வைரல் ஆகி உள்ளது.

Advertising
>
Advertising

செர்பியாவில் இருக்கும் பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சார்பில் ஒரு ட்வீட் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த ட்விட்டர் பதிவில், “பணவீக்கம் இதற்கு முந்தையை அளவை விட தற்போது அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்களே, நாங்கள் அரசு ஊழியர்கள் அனைவரும் அமைதியாக தொடர்ந்து உங்களுக்கு சம்பளம் இல்லாமல் எவ்வளவு நாட்கள் பணியாற்றுவோம் என நினைக்கிறீர்கள்?

கடந்த 3 மாதங்களாக சம்பளம் இல்லாமல், எங்கள் குழந்தைகள் பள்ளிகளுக்கு கட்டணம் செலுத்த முடியாமல் பள்ளியை விட்டு வெளியேற்றும் நிலை உள்ளது. இதுதான் புதிய பாகிஸ்தானா?” என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை டேக் செய்து அந்த ட்விட்டர் பதிவு வெளியிடப்பட்டு இருந்தது.
பாகிஸ்தான் அரசு ஊழியர்களே அரசுக்கு எதிராகக் கேள்வி கேட்டு வருகின்றனர் என நெட்டிசன்கள் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர்.

ஆனால், தூதரக சமுக வலைதள கணக்கை ஹேக் செய்துவிட்டார்கள் எனத் தற்போது விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்ட ட்வீட் கூட 2 மணி நேரத்துக்குள் டெலிட் செய்யப்பட்டுவிட்டது.

பாகிஸ்தானின் பொருளாதா நிலை தொடர்ந்து கடுமையான வீழ்ச்சிப் பாதையை சந்தித்து வருகிறது. இதை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானே ஒப்புக்கொண்டு பொது வெளியில் பேசினார். தொடர்ந்து உள்நாட்டு உற்பத்தி கடுமையான பாதிப்புகளைச் சந்துத்து வருகிறது. வெளிநாடுகளிடம் இருந்து பெற்ற கடன் அதிகம் இருப்பதாகவும், குறைவான வரி வசூல் எனப் பல காரணங்களால் பாகிஸ்தானின் நிதி நிலைமை மோசம் ஆக உள்ளது எனத் தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.

இந்த நிதி நிலை நெருக்கடி ‘ஒரு தேசிய பாதுகாப்பு’ பிரச்னை ஆக உருவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இதனால் மக்களுக்கு ஏற்ற நலவாழ்வு உதவிகளை செய்ய முடியாமல் பாகிஸ்தான் அரசு திணறி வருகிறது.

PAKISTAN, PAKISTAN PM, IMRAN KHAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்