'டிகிரி' எல்லாம் தேவையில்லங்க...! உங்களுக்கு 'டேலன்ட்' இருக்கா...? - எலான் மஸ்க் வெளியிட்ட 'முக்கிய' அறிவிப்பு...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தங்கள் நிறுவனத்தில் பணிபுரிய பட்டம் பெற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை என டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார்.

Advertising
>
Advertising

உலகின் பணக்கார பட்டியலில் முன்னிலையில் இருப்பவர் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க். அவருடைய நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். ஆனால், டெஸ்லா நிறுவனத்தில் ஒருவர் வேலைக்கு சேரவேண்டும் என்றால் அதற்கு படிப்பு ஒரு தடை இல்லை என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

ஆம், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ஜெர்மன் வாகனப் பதிப்பகமான ஆட்டோ பில்டிற்கு அளித்த நேர்காணலின் போது இதுகுறித்து கூறியுள்ளார்.

அந்த பேட்டியில், 'என்னுடைய டெஸ்லா கம்பெனியில் பணிபுரிய கல்லூரி படிப்பு அவசியம் இல்லை. கல்லூரி மட்டுமல்ல மேல்நிலை படிப்பு கூட அவசியம் இல்லை.

நாங்கள் எங்கள் நிறுவனத்திற்கு ஆட்களை தேர்ந்தெடுக்கும் போது அவர்கள் எந்த கல்லூரியில் படித்துள்ளனர், எவ்வளவு மதிப்பெண் வாங்கியுள்ளனர் என்றெல்லாம் பார்ப்பதில்லை. அவர்களின் திறமையே எங்களுக்கு முக்கியம். ஒரு நல்ல பல்கலைக்கழகத்தில் படித்திருந்தால் அவர்கள் நல்ல திறமையுள்ளவர்களாக தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

உங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு கூறவேண்டும் என்றால் பில் கேட்ஸ், லாரி எலிசன், ஸ்டீவ் ஜாப்ஸ் போன்றவர்களை எடுத்துக்கொள்வோம், அவர்கள் கல்லூரியில் பட்டம் பெறவில்லை. நாங்கள் ஒரு நல்ல பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற நபர்களை தேர்ந்தெடுப்பதற்கு பதில் ஒரு திறமைசாலியை தேர்ந்தெடுக்கவே விரும்புகிறோம்.

எங்கள் நிறுவனத்தின் நேர்காணலுக்கு வரும் நபர்களின் வாழ்க்கையில் கடினமான பிரச்சனைகளை குறித்து கேட்போம். அதை அவர்கள் எவ்வாறு சமாளித்தார்கள், எவ்வாறு அதற்கு தீர்வு கண்டனர் என்பதை குறித்தே பேச சொல்வோம்.

எங்கள் நிறுவனத்தில் பணிபுரிய திறமையே முக்கியம்' என மஸ்க் அந்த நேர்காணலில் கூறியிருப்பார். இதனை மேற்கோள் காட்டியே டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி, 'டெஸ்லா நிறுவனத்தில் வேலை செய்ய கல்லூரி பட்டம் பெற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை' என ட்வீட் செய்துள்ளார்.

ELON MUSK, TESLA, COLLEGE DEGREE, எலன் மாஸ்க், டெஸ்லா, டிகிரி, எலான் மஸ்க்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்